News April 14, 2025
டோல்கேட் இல்லை.. FASTag முறை ரத்து.. வரப்போகும் மாற்றம்!

டோல்கேட் வசூலில் மத்திய அரசு புதிய டெக்னாலஜியை நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டோல்கேட்டோ FASTag முறையோ இனி இருக்காதாம். அனைவரும் ஜிபிஎஸ் பொருத்திய வாகனங்களுக்கு தயாராகிக் கொள்ள வேண்டும். பயணிக்கும் தூரத்திற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுமாம். இதனால், அதிக கட்டணத்தை தவிர்க்கலாம். டோல்கேட்டில் காத்திருக்கும் சூழல் இருக்காது. சூப்பர்ல!
Similar News
News November 6, 2025
தேதி குறிச்சாச்சு.. விரைவில் ரஷ்மிகாவுக்கு கல்யாணம்!

விஜய் தேவரகொண்டா- ரஷ்மிகா மந்தனா இருவருக்கும் கடந்த அக்டோபர் 3-ம் தேதி, நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக கூறப்பட்டது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பே இன்னும் வெளியாகாத நிலையில், அவர்களின் திருமண தேதி குறித்த தகவலும் வெளிவந்துவிட்டது. அடுத்த வருடம், பிப்ரவரி 26-ம் தேதி, ராஜஸ்தானின் உதய்பூர் மாளிகையில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
News November 6, 2025
தனது ஆட்சி பற்றி தானே புகழ்ந்த டிரம்ப்

USA-வில் டிரம்ப் ஆட்சி அமைந்து ஓராண்டு ஆகிறது. இதனை கொண்டாடிய டிரம்ப், தான் வெற்றி பெற்றதன் மூலம் USA-வில் சுயாட்சி மீட்டெடுக்கப்பட்டதாக பேசியுள்ளார். அத்துடன், இந்த ஆட்சியும் மக்களும், பொருளாதாரத்தை காப்பாற்றி, சுதந்திரத்தை மீட்டதன் மூலம், நாட்டையே ஒன்றிணைந்து காப்பாற்றினோம் என தெரிவித்தார். மேலும், நியூயார்க்கில் குடியரசுக் கட்சி தோல்வியடைந்தது குறித்து கவலைப்பட தேவையில்லை என்றார்.
News November 6, 2025
WC மெடலுடன் PM மோடியை சந்தித்த பிரதிகா ராவல்!

உலகக்கோப்பை தொடரில் பாதியில் இருந்து வெளியேறிய பிரதிகா ராவலுக்கு ஏன் பதக்கம் தரவில்லை என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இந்த சூழலில்தான், நேற்று PM மோடியுடன், இந்திய அணியினர் சந்திப்பு நடைபெற்றது. அதில், பிரதிகா ராவலும் இடம் பெற்றிருந்தார். அப்போது அவரும் மெடலுடன் இருந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.


