News August 21, 2025
சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம் இல்லை

குண்டும், குழியுமாக இருக்கும் ரோட்டில் பயணிப்பதை விட அதற்கு செலுத்துவது தான் கட்டுவதுதான் கொடுமையானது. இந்த நிலையில்தான், கேரளாவில் சேதமடைந்து இருக்கும் NH-544 சாலைக்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தரமான சாலை வசதியை NHAI, மக்களுக்கு அமைத்து தர வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. இது அனைத்து டோல்கேட்டிலும் வந்தால் எப்படி இருக்கும்?
Similar News
News August 21, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 21, 2025
இதை செய்தால் வீட்டிற்குள் கொசு நுழையாது

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கொசுக்களும் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. இவற்றின் மூலம் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவுவதால் அவற்றை விரட்ட மக்கள் பல முயற்சிகளை கையாளுகின்றனர். கொசுவை விரட்ட, 5-10 பூண்டை நீரில் ஊறவைத்து அந்த நீரை வீடு முழுவதும் தெளித்தால், அந்த வாடைக்கு வீட்டிற்குள் கொசு வாராது எனக் கூறப்படுகிறது. வீட்டிற்குள் சூடம் கொளுத்துவதன் மூலமும் கொசு வரவிடாமல் தடுக்கலாம்.
News August 21, 2025
தமிழ் இயக்குநர்களால் முடியாததை சாதித்த லோகேஷ்

அண்மையில் வெளியான ‘கூலி’ படம் தற்போது 400 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது. இதற்கு முன் லோகேஷ் இயக்கிய விக்ரம், லியோ படங்களும் 400 கோடிகளை வசூலித்துள்ளன. இதனால் 400 கோடிகளை வசூலித்த ஹாட்ரிக் பட இயக்குநர் என்ற பெருமையை லோகேஷ் அடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் எந்த இயக்குநரும் இச்சாதனை புரிந்ததில்லை. தெலுங்கில் ராஜமெளலி, ஹிந்தியில் ராஜ்குமார் ஹிராணி ஆகியோர் மட்டுமே இச்சாதனையை செய்துள்ளனர்.