News April 28, 2024

இந்தியாவுக்கு No! சீனாவுக்கு Yes..!

image

டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், மின்சார வாகனங்களின் 2ஆவது பெரிய சந்தையாக விளங்கும் சீனாவுக்குத் திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். நடப்பு ஆண்டில் அவர் 2ஆவது முறையாக சீனா சென்றுள்ளார். பன்னாட்டு வணிகத்துக்கான சீன கவுன்சிலின் அழைப்பின் பேரில் அவர் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, கடும் பணிச் சுமையால் அவர் இந்திய பயணத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 28, 2026

அஜித் பவார் மறைவு இதயத்தை நொறுக்கியது: ராகுல்

image

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அஜித் பவார் மற்றும் அவருடன் விமானத்தில் பயணித்தவர்கள் விபத்தில் உயிரிழந்த செய்தி தனது இதயத்தை நொறுக்கிவிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மிகவும் கடினமான இந்த சூழலில் மகாராஷ்டிரா மக்களுக்கு தான் துணை நிற்பதாகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

News January 28, 2026

தங்கம் விலை தலைகீழாக மாறுகிறது

image

USA மத்திய வங்கி(The Fed) கூட்டம் கடந்த 2 நாள்களாக நடந்த நிலையில் இன்று வரி விகித அறிவிப்பு வெளியாகிறது. இந்த வட்டி விகித முடிவு தான் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பதை முடிவு செய்கிறது. வட்டி விகிதம் குறைந்தால் தங்கம் விலையானது பெரிய அளவில் மாறும். அதேநேரம் டாலர் பலவீனமடைந்து வருவதால் வட்டி விகிதம் உயர்ந்தால் தங்கம் விலை கணிசமாக உயரும். இந்திய நேரப்படி நள்ளிரவு இந்த அறிவிப்பு வெளியாகிறது.

News January 28, 2026

விடியா ஆட்சிக்கு Bill-லே சாட்சி: அதிமுக Next Move

image

அடுத்தக்கட்ட தேர்தல் பிரசாரத்தை அதிமுக முன்னெடுத்துள்ளது. ‘விடியா ஆட்சிக்கு Bill-லே சாட்சி’ என்ற பெயரில் பொதுமக்களிடம் பிரசாரம் மேற்கொள்ளுமாறு கட்சியினருக்கு EPS உத்தரவிட்டுள்ளார். திமுக – அதிமுக ஆட்சிகளில் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உள்ளிட்டவற்றின் விலைவாசி நிலவரத்தை ஒப்பிட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் ஏற்படும் நிதிச்சுமையை விளக்கும் நோட்டீஸை மக்களுக்கு வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!