News December 18, 2024
‘காதலிக்க நேரமில்லை’ 2ஆவது சிங்கிள் நாளை ரிலீஸ்

ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் 2ஆவது சிங்கிள் ‘லாவெண்டர் நிறமே’ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்க, கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். முன்னதாக, இப்படத்தின் முதலாவது சிங்கிள் ‘என்னை இழுக்குதடி’ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
Similar News
News September 6, 2025
அலிஷாவை கட்சி கவனிக்கிறது: அண்ணாமலை

TN BJP புதிய நிர்வாகிகள் பட்டியலில், தனது பெயர் இல்லாததால், விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அலிஷா கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரம் பொறுப்பு கொடுப்பார்கள், கட்சி அவரை பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
News September 6, 2025
இந்தியா செய்த காரியத்தால் ஏமாற்றமடைந்தேன்: டிரம்ப்

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இவ்வளவு அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கியதால் தான் ஏமாற்றமடைந்ததாக டிரம்ப் கூறியுள்ளார். 2 மாதங்களுக்கு முன்பு PM மோடி உடன் சந்திப்பை நடத்தியதாக குறிப்பிட்ட அவர், தற்போது 50% வரி விதிக்கப்பட்டதாகவும் கூறினார். உக்ரைன் போருக்கான நிதியை கச்சா எண்ணெய் மூலம் இந்தியா, ரஷ்யாவுக்கு வழங்குவதாக டிரம்ப் உள்பட USA அமைச்சர்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதனை இந்தியா மறுத்துள்ளது.
News September 6, 2025
ரஷ்யாவிடமே இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும்: நிர்மலா

தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக டிரம்ப் கூறியிருந்தார். கச்சா எண்ணெய் மட்டுமல்ல, எந்த பொருள்கள் வாங்க வேண்டும் என்றாலும், அதனை வாங்கும் முடிவை இந்தியாவே எடுக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். விலை, கொண்டுவரப்படும் செலவு உள்ளிட்டவற்றில் எங்கு வாங்கினால் பலன் கிடைக்குமோ, அங்குதான் இந்தியா பொருட்களை வாங்கும் என்றார்.