News August 10, 2024

தேர்தல் பத்திரத்துக்கு மாற்று கொண்டு வரப்படாது: அரசு

image

தேர்தல் பத்திரத்துக்கு மாற்றாக வேறு திட்டம் கொண்டு வரப்பட மாட்டாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்கும் தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எந்தச் சட்டத்தையும் கொண்டுவரும் திட்டம் இல்லை என்றார்.

Similar News

News January 24, 2026

புதுவையில் காவல்துறையினர் இடமாற்றம்

image

புதுவையில் சட்டசபை தேர்தலையொட்டி, காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர்கள், உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் புதுவையில் அமைந்துள்ள காவல் நிலையங்களில் உள்ள 27 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 35 ஏட்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையகம் எஸ்.எஸ்.பி. மோகன்குமார் பிறப்பித்துள்ளார்.

News January 24, 2026

மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. மகிழ்ச்சி செய்தி

image

CM ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று பள்ளிக் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தும் திருத்தச் சட்ட மசோதா, பிச்சை எடுப்பதை தடுத்தல் உள்ளிட்ட 5 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், மகளிர் உரிமைத் தொகை உயர்வு பற்றிய அறிவிப்பும் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

News January 24, 2026

நீட் தேர்வுக்காக காலை வெட்டிக்கொண்ட நபர்

image

UP-ல், மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக சூரஜ் பாஸ்கர் என்பவர் விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார். தனது காலை அவரே வெட்டிக்கொண்டு, ரவுடிகள் தாக்கியது போல் நாடகமாடியுள்ளார். எப்படியாவது நீட் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் கோட்டாவில் பாஸாகி விடலாம் என்ற எண்ணத்தில் அவர் காலை வெட்டியது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை ஹாஸ்பிடலில் போலீசார் சேர்த்தனர்.

error: Content is protected !!