News March 2, 2025

தவெகவிற்கு வியூக பணிகளை செய்யவில்லை: PK

image

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வர ரொம்ப நீண்ட காலம் ஆகும் எனவும், தான் தற்போது தேர்தல் வியூக பணியில் இருந்து விலகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தவெக உடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை எனவும், இதை சவாலாக சொல்கிறேன், அக்கட்சியிடம் ஒப்பந்தம் செய்ததற்கான எந்த ஆவணமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 15, 2026

சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் டாப் 5 ஜூஸ்கள்!

image

சர்க்கரை நோய் வந்துவிட்டால், ஜூஸ் பருகவே கூடாது என்ற சிந்தனை தான் பலருக்கும் வரும். ஆனால், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்து கொள்ளவே சில ஜூஸ்களை பருகலாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அந்த ஜூஸ்களின் பட்டியலை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து அவற்றை தெரிந்து கொள்ளவும். சர்க்கரை பிரச்னையால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதால், இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 15, 2026

அரசின் இலவசங்கள் வளர்ச்சி இல்லை வீழ்ச்சி: சீமான்

image

மக்களுக்கு அறிவிக்கப்படும் இலவச வாக்குறுதிகள் ஒரு ஏமாற்று வேலை என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார். மக்களை ஏமாற்றி கவர்ச்சியால் வாக்குகள் பறிக்கப்படுவதாகவும், பாதரச வெளிச்சத்தில் பௌர்ணமி வெளிச்சத்தை மக்கள் மறந்துவிடுவதாகவும் கூறியுள்ளார். அரசின் இலவசங்களால் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலை ஏறிவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News March 15, 2026

சுந்தர் பிச்சை பொன்மொழிகள்

image

*உங்கள் கனவுகளை நம்பி, அவற்றை விரும்பி வாழுங்கள். அதுவே வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சி. * உங்கள் திறன்களை தினமும் வளர்த்துக் கொள்ளுங்கள், தினந்தோறும் புதியது ஒன்றை கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். *உண்மையான தலைவர்கள் என்பவர்கள் தங்கள் சொந்த வெற்றியை பற்றி மட்டுமல்ல, சுற்றியுள்ளவர்களின் வெற்றியைப் பற்றியும் சிந்திப்பார்கள். *ஆர்வத்தோடு கற்றுக்கொள்வது உங்கள் வெற்றிக்கு வழி காட்டும்.

error: Content is protected !!