News August 25, 2024
புயல் வேண்டாம் மழையே போதும்: ரஜினி

விமர்சனம் என்ற பெயரில், பிறரது மனம் நோகும்படி சிலர் நடந்து கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். விமர்சனங்கள் என்பது மழை போல இருக்க வேண்டுமே தவிர, புயல் போல இருக்கக் கூடாது என அறிவுறுத்திய அவர், பிறரது மனம் கவலைப்படும்படி விமர்சிக்கக் கூடாது என கேட்டுக்கொண்டார். ‘கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழாவில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். இதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News March 11, 2026
எலும்புகள் வலுவாக இந்த 4 வகை உணவுகள் போதும்

*பால், மோர், வெந்தயம், எள், ராகி போன்ற கால்சியம் நிறைந்த உணவுகள் *முட்டையின் மஞ்சள் கரு, காளான் ஆகிய வைட்டமின் டி உணவுகள் *துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, பாதாம், வால்நட் போன்ற புரதம் நிறைந்தவை *வாழைப்பழம், பேரீச்சை, கடலை பருப்பு, பூசணி, சூரியகாந்தி விதை ஆகிய மெக்னீசியம், பாஸ்பரஸ் இருப்பவை. அதேநேரம், இனிப்புகள், குளிர்பானம், கூடுதல் உப்பு மற்றும் அளவுக்கதிமான காஃபின் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
News March 11, 2026
பகத்சிங் பொன்மொழிகள்

*முதலாளித்துவத்தை தூக்கி எறிவதே புரட்சியின் நோக்கம். *கேட்காத காதுகளை உரத்த குரல்களால் கேட்க செய்ய முடியும். *மக்களது நம்பிக்கையினை பெற்றுள்ளவரையே சட்டம் தனது புனித தன்மையினை பெற்று இருக்கும். *குருட்டு நம்பிக்கை மிகவும் ஆபத்தானது. இது மனிதனது மூளையினை முடமாக்கி மனிதனை பிற்போக்கில் தள்ளி விடும். *இச்சமூகத்தின் உண்மை கடவுள் தொழிலார்களே.
News March 11, 2026
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வீசிய ஈரான்

ஈரான் ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கண்ணிவெடிகளை அமைக்கத் தொடங்கியுள்ளதாக CNN தெரிவித்துள்ளது. ஏற்கெனவே அம்முனையை மூடிய ஈரான், அதனை தாண்டி சென்ற சில கப்பல்களையும் தாக்கியது. தற்போது இப்பாதையில் கண்ணி வெடிகளை ஈரான் அமைத்து வருவதாக US உளவுத்துறை கண்டறிந்துள்ளது. ஏற்கெனவே இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் LPG விநியோகம் தடைபட்டுள்ள நிலையில், ஈரானின் இந்த செயலால் கடும் பதற்றம் உருவாகியுள்ளது.


