News August 5, 2024

இஸ்லாமிய நாடுகளில் பாதுகாப்பு இல்லை: கங்கனா

image

வங்கதேசத்தில் வெடித்திருக்கும் கலவர சூழல் குறித்து நடிகை கங்கனா ரனாவத் X தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நம்மை சுற்றியிருக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கு ’பாரத்’தான் தாய்நாடு. இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர் உட்பட யாருக்கும் பாதுகாப்பு இல்லை. ஷேக் ஹசீனா கூட இந்தியாவை நாடி வந்துள்ளார். நாம் ராம ராஜ்யத்தில் வாழ்வதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Similar News

News March 18, 2026

விஜய்யை கடத்துவேன்.. தமிழ் நடிகை பரபரப்பு

image

சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட விஜய்யை மலையாள சினிமாவுக்கு கடத்திச் சென்றுவிடுவேன் என்று நடிகை ஸ்வாசிகா பேசியது வைரலாகிறது. மலையாள சினிமாவில் விஜய்யை கொண்டாடுவோம் என்று நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியவுடன், அங்கிருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்துள்ளனர். இந்த பதிவை விஜய் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்துடன் SM-களில் பகிர்ந்து வருகின்றனர்.

News March 18, 2026

2 மாத கர்ப்பத்துடன் தமிழ் நடிகை மரணம் REWIND

image

தமிழ், தெலுங்கு சினிமாவில் 90s காலகட்டத்தில் ஜொலித்த நடிகை செளந்தர்யா, 31 வயதிலேயே விமான விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில், இறக்கும் தருவாயில் 2-3 மாதங்கள் கர்ப்பமாக இருந்தார் என்ற செய்தி மீண்டும் வைரலாகி ரசிகர்களை உருகச் செய்துள்ளது. இறப்பதற்கு சில நாள்களுக்கு முன்பாக தான் கர்ப்பமாக இருப்பதை இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரிடம் அவர் கூறியது பெரும் சோகம்.

News March 18, 2026

கருப்பு ரிலீஸ்.. தேதி குறிச்சாச்சு

image

இப்ப வருமோ, எப்ப வருமோ என ‘கருப்பு’ பட ரிலீஸை எதிர்பார்த்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு ஆர்.ஜே.பாலாஜி மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கோடை விருந்தாக மே.14-ம் தேதி கருப்பு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். த்ரிஷா, சிவாதா, பிரகாஷ் ராஜ், சுவாசிகா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். முன்னதாக, இப்படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியதாக தகவல் வெளியாகியிருந்தது.

error: Content is protected !!