News August 8, 2025
11-ம் வகுப்புக்கு நடப்பாண்டு பொதுத்தேர்வு இல்லை: TN அரசு

TN அரசு வெளியிட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கையில் நடப்பாண்டு முதல் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையே தொடரும் என்றும் கூறியுள்ளது. 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தேசியக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், அதனை மாநில அரசு தொடர்ந்து ஏற்க மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 8, 2025
கோபி, சுதாகருக்கு ஆதரவு கரம் நீட்டிய சீமான்

சாதிய பிரச்னைகள் குறித்து கோபி – சுதாகர் சரியாகத்தானே சொல்லியுள்ளனர் என சீமான் தெரிவித்துள்ளார். அவர்களை ஏன் எச்சரிக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், எச்சரிப்பதே ஒரு சாதிய ஆணவம் தானே என கேட்டுள்ளார். ‘Society Paavangal’ என்று கோபி – சுதாகர் யூடியூப்பில் பதிவேற்றம் செய்த வீடியோவை நீக்குவதோடு, சேனலையும் தடை செய்யகோரி புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News August 8, 2025
காந்தாரா பட நடிகர் மரணம்!

பிரபல நடிகர் பிரபாகர் கல்யாணி, வீட்டில் மயங்கி விழுந்து காலமானார். இவர் 2 நாள்களுக்கு முன் தான் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘காந்தாரா’ படத்தின் மூலம் பெரும் பிரபலமடைந்த பிரபாகர், மேடை நாடகங்களிலும் மக்களை பெருமளவில் கவர்ந்தார். முன்னதாக, காந்தாரா 1’ படத்தில் நடித்து வந்த 3 நடிகர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருந்தது.
News August 8, 2025
VIRAL: வெள்ளை தாடியுடன் விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி வெள்ளை தாடியுடன் இருக்கும் போட்டோஸ் வைரலாகி வருகிறது. டெஸ்டில் இருந்து ஏன் ஓய்வு பெற்றீர்கள் என கேள்வி எழுப்பப்பட்ட போது, தான் 2 நாள்களுக்கு ஒருமுறை தாடிக்கு டை அடிப்பதாக தனது வயது குறித்து கிண்டலாக பேசியிருந்தார் கோலி. பல நெட்டிசன்களும், ‘கிங்குக்கு வயசாகிடுச்சு’ என வருத்தத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், இந்த லுக்கிலும் அவர் மாஸாக தான இருக்காரு?