News July 20, 2024
இணைந்து பணியாற்றுவதில் எந்த பிரச்னையும் இல்லை!

தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருடன் இணைந்து பணியாற்றுவதில் தனக்கு எவ்வித பிரச்னையும் இல்லை என்று BCCI நிர்வாகத்திடம் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணிக்காக விளையாடுவதுதான் முக்கியம் என்றும் கடந்த காலங்களில் ஏற்பட்ட வேறுபாடுகள் & கசப்பான மோதல்களை இந்திய அணிக்குள் கொண்டு வர மாட்டோம் எனவும் இருவரும் உறுதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Similar News
News November 26, 2025
கோலிவுட்டில் புது காதல் ஜோடியா?

அண்மையில் வெளியான ‘பைசன்’ படத்தில் துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது. இதனிடையே, திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் இருவரும் காதலித்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் இருவரும் ஒரே நேரத்தில் ’பைசன்’ படத்தில் இடம்பெற்ற பாடலை வைத்து இன்ஸ்டாவில் போஸ்டை போட்டுள்ளனர். இந்த செய்தி தீயாக பரவியதும் பாடலை டெலிட் செய்துவிட்டனர்.
News November 26, 2025
செங்கோட்டையன் முடிவு: OPS தரப்பு நிலைபாடு இதுதான்

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தால், அது அவருடைய அரசியல் சாணக்யத்தனத்தையே காட்டும் என நாஞ்சில் கோலப்பன் கூறியுள்ளார். இதனால் OPS-க்கு பின்னடைவோ, ஏமாற்றமோ கிடையாது என்ற அவர், தவெகவில் KAS இணைந்தால் அது அக்கட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இதனால் EPS-க்கு தான் பாதிப்பு, அவர்தான் தனித்துவிடப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
சற்றுமுன்: அதிமுக மூத்த தலைவர் காலமானார்

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், விருதுநகர் Ex மாவட்டச் செயலாளருமான விநாயகமூர்த்தி(63) உடல்நலக்குறைவால் காலமானார். கட்சியின் மீது தீவிர விசுவாசம் கொண்ட அன்புச் சகோதரரின் இழப்பு வேதனையளிப்பதாக EPS இரங்கல் தெரிவித்துள்ளார். விநாயகமூர்த்தி, அதிமுகவில் அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். 2006 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.


