News April 26, 2025

அமர்நாத் யாத்திரைக்கு பிரச்னை இல்லை: பியூஷ்

image

பஹல்காம் தாக்குதல் பரபரப்புக்கு இடையே அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். காஷ்மீரை அதன் வளர்ச்சி பாதையில் இருந்து யாராலும் ஒருபோதும் தடுக்கவே முடியாது எனவும் அவர் உறுதிபட கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் புனித பயணம் செல்வது வழக்கம்.

Similar News

News April 26, 2025

CSK தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன்: ப்ளெமிங்

image

CSK அணியின் தொடர் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங் தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில், 7 தோல்விகளை தழுவி CSK அணி கடைசி இடத்தில் உள்ளது. இதுகுறித்து பேசியிருக்கும் ப்ளெமிங், ஏலத்தில் திறமையான வீரர்களை அடையாளம் காணாமல் விட்டுவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

News April 26, 2025

சொந்த அரசையே கேலி செய்யும் பாகிஸ்தானியர்

image

பஹல்காம் தாக்குதலால் இரு நாடுகளுக்கு இடையில் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், தங்கள் அரசை ட்ரோல் செய்து பாகிஸ்தானியர்கள் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். பாக்., போர் விமானம் போன்ற செட்டிங்குடன் பைக் ஓட்டும் ஒருவரின் போட்டோவை பகிர்ந்து, ‘இந்திய விமானப்படையுடன் சண்டை போடுவதானால் காலை 9 மணிக்குள் செய்யுங்கள், 9:15-க்கு பின் பெட்ரோல் சப்ளை கிடைக்காது’ என்று நாட்டு நிலையை கிண்டலடிக்கின்றனர்.

News April 26, 2025

கடனை மிரட்டி வசூலித்தால் 3 வருஷம் ஜெயில்

image

கடன் வசூல் தொடர்பான புதிய சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார். இதன்படி, தனி நபர்கள், சுய உதவிக்குழுக்கள் ஆகியோருக்கு கடன் வழங்கிய நிறுவனம் வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் பிணையில் வரமுடியாத 3 ஆண்டு சிறைத்தண்டனையோ (அ) ₹5 லட்சம் அபராதமோ (அ) இரண்டுமே விதிக்கப்படலாம். நீங்க என்ன நினைக்கிறீங்க?

error: Content is protected !!