News August 26, 2024
வாட்ஸ்அப்பை முறைப்படுத்தும் திட்டமில்லை: மத்திய அரசு

வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட தகவல்தொடர்பு செயலிகளை முறைப்படுத்தும் திட்டமில்லை என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. 2023 புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் அந்த செயலிகளையும் முறைப்படுத்த அரசிடம் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. இதற்கு பதிலளித்த அதிகாரிகள், புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட வரையறைக்குள் அச்செயலிகள் வராது எனப் பதிலளித்துள்ளனர்.
Similar News
News September 18, 2025
BREAKING: மீண்டும் கூட்டணியில் OPS, TTV?

NDA கூட்டணியில் OPS, TTV, சசிகலா இணைவார்களா என்ற கேள்விக்கு EPS நேரடியாக பதிலளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு பெரிய கட்சிகள் கூட்டணி அமைப்பது இயல்பான ஒன்றுதான்; கூட்டணி, உள்கட்சி விவகாரம் குறித்து நாங்கள் பேசி முடிவு எடுத்துக்கொள்வோம் என்று நேரடியாக இல்லாமல் சூசகமாக பதிலளித்தார். இதனால், OPS, TTV மீண்டும் கூட்டணியில் இணைய வாய்ப்பா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News September 18, 2025
சீன மாஸ்டர்ஸ்: காலிறுதியில் பி.வி.சிந்து

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றார். 6-ம் நிலையில் உள்ள தாய்லாந்தின் போர்ன்பாவி சோச்சுவாங்கை எதிர்கொண்ட அவர், 21 – 15, 21 -15 என்ற கணக்கில் வெற்றியடைந்தார். சமீபகாலமாக பெரிய வெற்றியை பெறாமல் உள்ள சிந்து, இந்த தொடரில் தடம் பதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் போராடி வருகிறார்.
News September 18, 2025
இவர்களுக்கு ₹1000 மகளிர் உரிமை தொகை கிடைக்காது

மகளிர் உரிமை தொகை குறித்த அறிவிப்பு செப்.15-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு, எதுவும் வெளியாகாததால் பெண்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், தகுதியில்லாதவர்களுக்கு ₹1000 கிடையாது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தகுதி இல்லாமல் அரசு பணத்தை அனைவருக்கும் எடுத்துகொடுக்க முடியாது எனக் கூறிய அவர், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்பட்ட தகுதியான மனுக்களுக்கு ₹1000 வழங்கப்படும் என்றார்.