News May 27, 2024
எந்த கட்சிக்கும் அமோக வெற்றி கிடைக்காது: செம்மலை

மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் அமோக வெற்றி கிடைக்காது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியுள்ளார். தனியார் வானொலி நிகழ்ச்சியில் பேசிய அவர், “தொங்கு நாடாளுமன்றம் அமைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கருதுகிறேன். தமிழ்நாட்டில் திமுக கடந்த தேர்தலை போல அதிக தொகுதிகளைக் கைப்பற்ற முடியாது. தனித்து தேர்தலை சந்தித்த அதிமுகவின் வாக்கு வங்கி 30% வரை அதிகரிக்கும்” என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
Similar News
News March 6, 2026
விஜய்க்கு ஆதரவாக இணைந்தனர்.. திருப்பம்

விஜய் – சங்கீதா விவாகரத்து ஏற்கெனவே புகைந்து கொண்டிருக்க, அதில் எண்ணெய்யை ஊற்றி இருக்கிறார் விஜய். சங்கீதா, நடிகை என குறிப்பிட்டது த்ரிஷாதான் என பலரும் கூறிவரும் நிலையில், அவருடனே ஒன்றாக வந்து விஜய் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். இதனையடுத்து, இதற்கு எதிர்ப்புகள் புயலாக கிளம்பியுள்ளன. அதேநேரம், மோகன் ஜி, ஸ்ரீமன் & விஜய் ரசிகர்கள் ஆகியோர் விஜய்க்கு ஆதரவாக ஒன்றாக இணைந்து பதிவிட்டு வருகின்றனர்.
News March 6, 2026
TN-க்கு பொறுப்பு கவர்னர்.. யார் இந்த ராஜேந்திர அர்லேகர்?

TN-க்கு பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேரளாவின் கவர்னராக 2025-ல் பதவியேற்றார். கோவாவை சேர்ந்த இவர், பாஜக மூத்த தலைவராக அறியப்படுகிறார். 2012-2015 காலக்கட்டத்தில் கோவாவின் சபாநாயகராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர். 2021-2023-ல் இமாச்சலின் 21-வது கவர்னராகவும், 2023-2025-ல் பிஹாரின் 42-வது கவர்னராகவும் பணியாற்றியுள்ளார்.
News March 6, 2026
ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட்டை வெளியிடவுள்ளேன்: CM

1967-ல் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று, TN-ன் எழுச்சிக்கு விதையூன்றிய நாள் இன்று என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இந்த நாளில் அடுத்த 5 ஆண்டுகளின் வளர்ச்சிக்கான ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட்டை அறிவிக்க இருப்பதாக குறிப்பிட்ட அவர், திராவிட மாடல் 2.0-வுக்கான அடிக்கல்லை நாட்டுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களுக்கு இன்று புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


