News August 27, 2025
OTP பெறாமல் ஆன்லைன் சேவைகளே கிடையாது: HC

மத்திய, மாநில & தனியார் நிறுவனங்கள் பல்வேறு சேவைகளுக்காக OTP பெறுவது தனியுரிமை விதிகளுக்கு முரணானது என கூறி, OTP-க்கு தடை விதிக்க மதுரை HC-ல் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட், இன்றைய காலகட்டத்தில் OTP பெறாமல் எந்த ஒரு ஆன்லைன் சேவையும் நடைபெறாது என தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தது. முன்னதாக, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற DMK முன்னெடுப்பில் OTP பெறுவதற்கு HC தடை விதித்தது.
Similar News
News March 9, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 சரிவு!

<<19333418>>சர்வதேச சந்தையில்<<>> ஏற்பட்டுள்ள சரிவின் எதிரொலியால் சென்னையில் தங்கம் விலை இன்று(மார்ச் 9) சவரனுக்கு ₹800 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம், 1 கிராம் ₹14,950-க்கும், சவரன் ₹1,19,600-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி 1 கிராம் ₹290-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,90,000-க்கும் விற்பனையாகிறது.
News March 9, 2026
‘ஜன நாயகன்’ படத்துக்கு இன்று முக்கியமான நாள்!

‘ஜன நாயகன்’ படம் சென்சார் பிரச்னையால் ரிலீஸாகாமல் முடங்கியிருந்தது. இந்நிலையில் இத்திரைப்படம் இன்று ரிவைசிங் கமிட்டி படத்தை பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சுமுகமாக முடியும் பட்சத்தில் படம் மார்ச் 19-ல் வெளியாக வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரத்தினர் சொல்கின்றனர். இது விஜய்யின் கடைசி படம் என கூறப்படுவதால் தேர்தலுக்கு முன் படம் ரிலீசாகுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
News March 9, 2026
புதுவையில் ஓயாத திமுக – காங்., கூட்டணி பஞ்சாயத்து!

புதுச்சேரியில், கூட்டணிக்கு யார் தலைமை என்ற பஞ்சாயத்தில் இன்னும் பேச்சுவார்த்தையே தொடங்காமல் திமுக – காங்கிரஸ் தலைவர்கள் மோதல் போக்கில் உள்ளனர். இதனால், அந்தக் கூட்டணியில் உள்ள <<19317882>>CPM 2 தொகுதிகளில்<<>> தனியாக போட்டி என ஏற்கெனவே அறிவித்துள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் தான் பெரிய கட்சி என்பதால் தங்கள் அலுவலகத்திற்கு திமுக வர வேண்டும் என நாராயணசாமி வெளிப்படையாக அறிவித்துள்ளார். மோதல் முடிவுக்கு வருமா?


