News June 15, 2024
கட்சியில் யாருக்கும் அதிருப்தி இல்லை: அஜித் பவார்

மாநிலங்களவைத் தேர்தலில் தனது மனைவி போட்டியிடுவதால் யாருக்கும் வருத்தமில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். கட்சியின் நாடாளுமன்ற குழு எடுத்த முடிவின் அடிப்படையிலேயே, தனது மனைவி போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அஜித் பவாரின் மனைவி சுனித்ரா பவார், பாராமதி தொகுதியில் சரத்பவார் மகள் சுப்ரியா சுலேவிடம் தோல்வி அடைந்தார்.
Similar News
News March 4, 2026
சமையலால் மாமியாருடன் சண்டை.. மருமகள் தற்கொலை

பெங்களூருவை சேர்ந்த சுஷ்மா(35) புனித் தம்பதிக்கு 4 வயது மகன் உள்ளார். சுஷ்மாவிற்கும் மாமியாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சமையல் செய்வது தொடர்பாக மாமியாருடன் சண்டை ஏற்பட, மனமுடைந்த சுஷ்மா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வரதட்சணைக்காக அவரை கொடுமைப்படுத்தியதாக பெண் வீட்டார் குற்றம்சாட்ட, தற்போது புனித் கைது செய்யப்பட்டுள்ளார். மாமியார் தலைமறைவாகியுள்ளார்.
News March 4, 2026
இந்தி பெயருக்கு அதிகாரிகளே காரணம்: தமிழிசை

திருச்சி ரயில் நிலையத்தின் புதிய நுழைவாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என பெயரிடப்பட்டுள்ளதற்கு <<19295250>>CM ஸ்டாலின்<<>> உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியில் உள்ள பெயரை தமிழில் மாற்ற ரயில்வே துறை அமைச்சருக்கு தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார். அதிகாரிகள் செய்த தவறுக்கு மத்திய அரசு இந்தியை திணிப்பதாக குற்றம்சாட்டப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News March 4, 2026
தவெக கூட்டத்தில் சங்கீதா.. வைரலாகும் PHOTO

தஞ்சையில் நடந்த தவெக கூட்டத்தில் விஜய் – சங்கீதா இருவரும் இருக்கும் போட்டோவை ஒருவர் காண்பித்தது வைரலாகிறது. விவகாரத்து பற்றி இதுவரை மெளனம் கலைக்காத விஜய் பற்றி ஏற்கெனவே விமர்சனங்கள் இருக்கும் நிலையில், இதுபோன்று நடந்துள்ளது. மேலும், இக்கூட்டத்தில் <<19295194>>பெண் பாதுகாப்பு<<>> பற்றி விஜய் பேசாததற்கு, தனது தனிப்பட்ட வாழ்க்கை சிக்கலே காரணம் என்றும் SM-ல் சிலர் கூறி வருகின்றனர்.


