News April 4, 2024
ரூ.1,000 உரிமைத் தொகையை யாராலும் நிறுத்த முடியாது

அதிமுக இல்லையென்றால் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வந்திருக்காது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், “அதிமுக கொடுத்த தொடர் அழுத்தத்தால் தான் மகளிர் உரிமைத் தொகையை திமுக அரசு வழங்குகிறது. ரூ.1,000 உரிமைத் தொகையை யாராலும் நிறுத்த முடியாது, அதற்கு நான் பொறுப்பு. உரிமைத் தொகையை நிறுத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.
Similar News
News January 18, 2026
இந்த அறிகுறி இருந்தால் சர்க்கரை நோய் கன்பார்ம்!

உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால் சில அறிகுறிகள் மூலம் அதை அறிந்து கொள்ளலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதன்படி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், அளவுக்கு அதிகமான தாகம், பசி உணர்வு அதிகரிப்பு, அதீத உடல்சோர்வு, கண்பார்வை பிரச்னை, புண், காயம் மெதுவாக ஆறுவது உள்ளிட்டவை அதில் அடங்குமாம். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக டாக்டர்களிடம் ஆலோசனையை பெறுவது நல்லது.
News January 18, 2026
நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?

பொங்கல் பண்டிகையை ஒட்டி, பள்ளிகளுக்கு ஜன.14-18 வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை மாணவர்கள் கொண்டாடி தீர்த்த நிலையில், சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இருப்பினும், போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே செல்வதால், நாளையும் விடுமுறை அளிக்க பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் கூட்ட நெரிசலில் சிரமத்தை சந்திக்காமல் பயணிக்கலாம் என்கின்றனர்.
News January 18, 2026
இன்னும் எத்தனை நாளைக்கு ஜன நாயகன்? வானதி

ஜன நாயகன் பட விவகாரத்தில் விசாரணை நடந்துவரும் நிலையில், இடையில் புகுந்து யாரும் ஒன்றும் செய்ய முடியாது என பாஜக MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும், இன்னும் எத்தனை நாளைக்கு இப்படம் பற்றி பேசிக்கொண்டிருப்பது என்ற அவர், விஜய் கட்சி தொடங்கியிருப்பதால் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெறுவதாகவும், இது மாதிரி எத்தனையோ படங்கள் சென்சாரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.


