News April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டபடி புதிய உறுப்பினர் நியமனம் கூடாது: SC

வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என சுப்ரீம் கோர்ட்(SC) உத்தரவிட்டுள்ளது. மேலும், வக்ஃப் என பதியப்பட்ட, அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மீது புதிய சட்டத்தின் கீழ் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
Similar News
News December 3, 2025
TN-ல் இந்தி கற்க முடியவில்லை: எல்.முருகன்

தமிழ்நாட்டில் அரசியல் சூழ்நிலை காரணமாக தன்னால் இந்தி கற்க முடியவில்லை என எல்.முருகன் கூறியிருக்கிறார். இதனால் டெல்லி சென்ற பிறகுதான் இந்தி கற்றதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் அந்த வாய்ப்பு தனக்கு மறுக்கப்பட்டது ஏன் என கேட்டுள்ளார். மேலும் இந்தி கற்பது தன்னுடைய உரிமை எனவும் ஆனால், மும்மொழிக் கொள்கை இந்தியை திணிக்கிறது என்று கூறி தமிழகம் அதனை எதிர்க்கிறது என்றும் அவர் பேசியுள்ளார்.
News December 3, 2025
புயல் சின்னம்.. மழை வெளுத்து வாங்கும்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாக IMD தெரிவித்துள்ளது. காலை 5.30 மணி நிலவரப்படி புதுச்சேரி அருகே கடற்கரையை ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தரைப்பகுதிக்கு வந்ததும் மேலும் வலுவிழக்கும் எனவும் கணித்துள்ளது. மேலும், அடுத்த 2 மணி நேரத்திற்கு காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.
News December 3, 2025
FLASH: மீள முடியாமல் தவிக்கும் இந்திய சந்தைகள்!

பங்குச்சந்தைகள் கடந்த 3 நாள்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இன்று வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 264 புள்ளிகள் சரிந்து 84,873 புள்ளிகளிலும், நிஃப்டி 96 புள்ளிகள் சரிந்து 25,935 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ், கடந்த 3 நாள்களில் மட்டும் 833 புள்ளிகளை இழந்துள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


