News May 25, 2024
இனி 16 நாள்களுக்கு மேல் காத்திருக்க தேவையில்லை

ஆன்லைன் வழியாக அரசின் சான்றிதழ்கள், பட்டா மாறுதல்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி 16 நாள்களுக்கு மேல் காத்திருக்க தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முறைகேடுகள், தாமதம் நிகழ்வதை தடுக்கும் வகையில் தாலுகா வாரியாக துணை ஆட்சியர் நிலையில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர். சிறப்பு அதிகாரி தலைமையிலான குழு, உரிய நேரத்தில் ஆன்லைன் வழியான விண்ணப்பங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யும்.
Similar News
News March 5, 2026
விழுப்புரம்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் – NO EXAM!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் இங்கே<
News March 5, 2026
விஜய் வாங்கி கட்டிக்கொள்வார்: ஜெயக்குமார்

எழுதி கொடுத்த ஸ்கிரிப்டை சிறப்பாக பேசும் ஒரு நடிகராகவே விஜய்யை பார்க்க வேண்டும் என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். ஒரு ஸ்கிரிப்ட்டை மனப்பாடம் செய்வது மிகவும் ஈஸி எனக் கூறிய அவர், விமர்சனம் என்ற பெயரில் விஜய் தங்கள் பக்கம் திரும்பினால் வாங்கி கட்டிக்கொள்வார் என எச்சரித்துள்ளார். மேலும், அரசு பணத்தை எவ்வளவு வாரி இரைத்தாலும் திமுக வெற்றிபெற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
News March 5, 2026
2 வாரங்களில் தவெக வேட்பாளர் பட்டியல்

2026 தேர்தலில் தனித்து களமிறங்க திட்டமிட்டுள்ள தவெக, 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிக்கு 4 வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை ஏற்கெனவே முடித்துள்ள விஜய், அவர்களிடம் விரைவில் நேர்காணல் செய்யவிருக்கிறார். அதன்பின், வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு, தொகுதி வாரியாக பரப்புரை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.


