News February 17, 2025
5,700 ஆண்டுகள் ரீசார்ஜ் செய்யத் தேவையில்லை

ரீசார்ஜ் செய்யத் தேவையின்றி 5,700 ஆண்டுகள் இயங்கும் பேட்டரியை ப்ரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கார்பன் 14 என்ற மூலக்கூறில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சில் இருந்து இந்த பேட்டரி தயாரிக்கப்படுகிறது. மனிதர்கள் கதிர்வீச்சால் பாதிக்காமல் இருக்க, அதனைச்சுற்றி வைரம் பதிக்கப்படுகிறது. ஆனாலும், இந்த பேட்டரி குறித்த ஆய்வு இன்னும் ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளது.
Similar News
News September 13, 2025
மீண்டும் வருமா அந்த மகிழ்ச்சி!

மனிதரின் கிரியேட்டிவிட்டியால் தோன்றுவது தான் டெக்னாலஜி. ஆனால், அது இன்று நம் வாழ்க்கை முறையையே புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பல்வேறு நன்மைகள் கிடைத்தாலும், நாம் இழந்துவிட்ட திறன்களும் ஏராளம். குறிப்பாக, டெக்னாலஜி அவ்வளவாக ஊடுருவாத நம் குழந்தைப் பருவம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது நினைவிருக்கிறதா.. எப்போதாவது அந்த அனுபவங்களை நினைத்துப் பார்க்கிறீர்களா?
News September 13, 2025
தமன்னா எதிர்பார்க்கும் அந்த அதிர்ஷ்டசாலி யாரோ?

விஜய் வர்மா உடனான பிரேக்கப்பிற்கு பிறகு, தமன்னா தனது எதிர்கால வாழ்க்கை துணை குறித்து பகிர்ந்துள்ளார். முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் தான், நான் அவர்களின் வாழ்க்கைக்கு வந்ததாக கருத வேண்டும், அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலி எனக்கு வாழ்க்கைத் துணையாக வரவேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும், அந்த அதிர்ஷ்டசாலியை பார்க்க ஆவலாக இருப்பதாகவும், அது விரைவில் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News September 13, 2025
டாலர் சிட்டியில் தொழில் பாதிப்பு: EPS

டிரம்ப் வரி விதிப்பால் டாலர் சிட்டியான திருப்பூரில் 50% தொழில்கள் முடங்கிவிட்டதாக EPS தெரிவித்துள்ளார். தொழில் அதிபர்களை ஸ்டாலின் சந்திக்காதது தவறு என தெரிவித்த அவர், பாதிப்புகளை PM மோடியிடம் CM எடுத்து கூறி இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் முன் உள்ளூர் தொழிலை பாதுகாக்க வேண்டும் எனவும் திமுக அரசை EPS வலியுறுத்தியுள்ளார்.