News October 16, 2025
இனி Lip Balm வேண்டாம்; இத யூஸ் பண்ணுங்க

குளிர்காலத்தில் உதடுகள் வரண்டு போவதால் வெடிப்புகள் ஏற்படும். இது உங்கள் முக அழகை கெடுக்கிறது. இதற்காக சிலர் லிப் பாம் பயன்படுத்துகின்றனர். ஆனால் அவை தற்காலிக தீர்வாகவே இருக்கிறது. உங்கள் உதடுகள் மென்மையாக மாற லிப் பாமுக்கு பதில் பாதாம் எண்ணெய் லேசாக தடவிப் பாருங்கள். இதை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். அத்துடன் தேவையான அளவு தண்ணீர் அருந்துவதும் அவசியமாகிறது. SHARE.
Similar News
News October 17, 2025
உலகின் தூய்மையான நகரங்கள் இவை தான்

சுத்தமான தெருக்கள், தூய்மையான காற்று, நிலைத்த வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உலகின் சுத்தமான நகரங்கள் பட்டியலிடப்படுகின்றன. இப்பட்டியலில் உள்ள நகரங்களில் நவீன கழிவு மேலாண்மை, கடுமையான மாசு கட்டுப்பாட்டு விதிகள், பசுமையான உட்கட்டமைப்புகளுக்கான முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் உலகின் டாப் 10 தூய்மையான நகரங்களை மேலே தொகுத்துள்ளோம். அதை Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
News October 17, 2025
BREAKING: தங்கம் விலை சவரன் ₹1 லட்சம்

தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், ஒரு சவரன் ₹1 லட்சத்தை கடந்துவிட்டது. அதாவது, 22 கேரட் தங்கம் சவரன் ₹95,200, Hallmarking Charges ₹1,904, GST 3% ₹2,913 சேர்த்து ₹1,00,017-க்கு விற்பனையாகிறது. சில கடைகளில் சேதாரம் எனக் கூடுதலாகவும் பணம் வசூலிக்கப்படுகின்றன. உலக நாடுகள் மீதான வரிவிதிப்பை USA அதிபர் டிரம்ப் திரும்பப் பெற்றால் மட்டுமே தங்கம் விலை பெரிதாகக் குறைய வாய்ப்புள்ளதாம்.
News October 17, 2025
ம.பி.யில் மீண்டும் ஒரு அதிர்ச்சி.. மருந்தில் நெளிந்த புழுக்கள்

ம.பி.,யில் இருமல் சிரப் குடித்த குழந்தைகள் உயிரிழந்த துயரம் அடங்குவதற்குள், மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. குவாலியர் மாவட்ட அரசு ஹாஸ்பிடலில் குழந்தைக்கு கொடுக்கப்பட்ட ‘Azithromycin’ மருந்தில் புழுக்கள் நெளிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தாயார் புகார் அளித்ததை தொடர்ந்து, அந்த ஹாஸ்பிடலில் இருந்த அனைத்து Azithromycin மருந்துகளும் ஆய்வுகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டன.