News September 16, 2025
இனி கண்ணாடி வேண்டாம்.. 2 துளி சொட்டு மருந்தே போதும்

தூரத்தில் உள்ளவற்றை தெளிவாக பார்க்க, பார்வைத்திறனுக்கேற்ற கண்ணாடிகள், கான்டக்ட் லென்சுகளை பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், ஒரு சொட்டு மருந்தை 2 துளிகள் போட்டால், அதன் மூலம் 2 வருடங்களுக்கு தெளிவான பார்வை கிடைப்பதாக டென்மார்க்கில் ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. Pilocarpine, Diclofenac ஆகியவற்றால் இந்த சொட்டுமருந்து உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, விரைவில் கண் கண்ணாடிகளுக்கு குட் பாய் சொல்லலாம்
Similar News
News September 16, 2025
மீனவர்கள் மீது திமுகவுக்கு அக்கறையில்லை: நயினார்

திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தொடர்ச்சியாக பாஜக விமர்சித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, மீனவர்களுக்கு 2 லட்சம் புது வீடுகள் கட்டித்தரப்படும் என சொன்னீங்களே, செஞ்சீங்களா என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். பல கோடி செலவில் பேனா சிலை அமைக்க ஆர்வம் காட்டும் திமுக, 4 ஆண்டுகளாக மீனவர்களுக்கென ஒரு வீடு கூட கட்டித்தரவில்லை என விமர்சித்துள்ளார்.
News September 16, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 16, ஆவணி 31 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 AM – 4:30 AM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: தசமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை.
News September 16, 2025
பணியிட அவமானத்தால் தற்கொலை: ₹90 கோடி இழப்பீடு

பணியிடத்தில் அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்த பெண்ணின் குடும்பத்தாருக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனம் ₹90 கோடி இழப்பீடு வழங்க ஜப்பான் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021-ல் சடோமி (25) என்ற பெண்ணை, நிறுவன தலைவர் தெரு நாய் என கூறி அவமானப்படுத்தியதால் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அது தோல்வியில் முடிய, கோமாவில் இருந்த அவர் 2023-ல் உயிரிழந்தார். இதையடுத்து, அப்பெண்ணின் குடும்பத்தார் கோர்ட்டை அணுகினர்.