News August 26, 2025
உக்ரைனுக்கு இனி நிதி உதவி கிடையாது: டிரம்ப்

உக்ரைனுக்கு இனி அமெரிக்கா நிதி உதவி செய்யாது என டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு உதவி தேவைப்படும் பட்சத்தில் NATO நாடுகள் மூலம் தங்களை அணுக வேண்டும் எனவும், அப்படி அணுகினால் தாங்கள் NATO உடன் ஒப்பந்தம் மேற்கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, ஏற்கனவே அதிக நிதி உதவி செய்துவிட்டதால், உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களை தங்களுக்கு தர வேண்டும் என டிரம்ப் கூறியிருந்தார்.
Similar News
News March 3, 2026
ஜோர்டான் மன்னருடன் PM மோடி பேச்சு

ஜோர்டான் மீது ஈரான் வான்வழித் தாக்குதலை தொடுக்கும் நிலையில், அந்நாட்டின் மன்னர் அப்துல்லா 2-விடம் PM மோடி உரையாடியுள்ளார். அப்போது, ஜோர்டானில் நிலவும் சூழல் குறித்து கவலை கூறியதாகவும், ஜோர்டான் மக்களின் நலன், அமைதி, பாதுகாப்புக்கு இந்தியாவின் சார்பாக மீண்டும் ஆதரவை தெரிவித்தாகவும் X பதிவில் PM மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜோர்டானில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பதற்காக அவர் நன்றியும் கூறியுள்ளார்.
News March 3, 2026
‘போர் பதற்றம்’ தமிழர்களுக்கு பாதிப்பில்லை: TN அரசு

போர் காரணமாக வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தமிழர்கள் பற்றி அவர்களது உறவினர்கள் அச்சப்படுகின்றனர். இந்நிலையில், போரினால் தமிழர்களுக்கு பாதிப்பில்லை என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது. கட்டுப்பாட்டு மையத்திடம் உதவிகேட்ட 974 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், விமான சேவை தொடங்கியவுடன் அவர்கள் இந்தியாவிற்கு அனுப்பப்படுவார்கள் எனவும் TN அரசு குறிப்பிட்டுள்ளது.
News March 3, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 626 ▶குறள்:
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.
▶பொருள்: இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழ்ந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?.


