News June 26, 2024
இனி தப்ப முடியாது : வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி

சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் வாகன திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில், முதற்கட்டமாக சென்னை போலீஸார் நடமாடும் நவீன கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இரவு சோதனையின் போது சாலை சந்திப்புகளில் இந்த கேமராக்களை வைப்பதால், அதில் வாகன எண் பதிவாகும். இதன் மூலம் திருடுபோன வாகனத்தை எளிதில் மீட்க முடியும்.
Similar News
News November 24, 2025
காஞ்சி: விபத்தில் பெண் பரிதாப பலி!

காஞ்சி: கோனேரி குப்பம், துர்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி(65). இவர் கூலி வேலைக்குச் சென்று விட்டு திரும்பி வரும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

BREAKING: 8 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு

புயல் எதிரொலியால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி இதுவரை 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், திருவாரூர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது புதிதாக திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.