News September 24, 2025

இனி சாக்லேட் பாய் கேரக்டர் வேண்டாம்: சாந்தனு

image

விஜய் சேதுபதி, SK, மணிகண்டன் போன்று சினிமாவில் அடிமட்டத்தில் இருந்து ஒவ்வொன்றாக கற்றுக்கொள்ள தொடங்கி இருப்பதாக சாந்தனு தெரிவித்துள்ளார். சாக்லேட் பாய் கதாபாத்திரம் வேண்டாம் என்பதில் தீர்க்கமாக இருப்பதால், சாமானிய மக்களுக்கு தன்னை பிடிக்கும் நோக்கில் கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்கிறேன் என்றார். மேலும், தான் இனி சாந்தனு பாக்கியராஜ் இல்லை; வெறும் சாந்தனு மட்டும்தான் எனவும் கூறியுள்ளார்.

Similar News

News September 24, 2025

டிகிரி முடித்தால் வங்கி வேலை.. 3500 காலியிடங்கள்!

image

Canara Bank-ல் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 20- 28 வயதுக்குட்பட்ட எந்த டிகிரி முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறுவோருக்கு மாதம் ₹15,000 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு வரும் அக்டோபர் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும். வேலை தேடுவோருக்கு இதை பகிரவும்.

News September 24, 2025

மத்திய அரசின் மக்கள் விரோத திட்டம் என்ன? நயினார்

image

மத்திய அரசு கொண்டுவந்த மக்கள் விரோத திட்டம் என்ன என்பதை CM ஸ்டாலின் சொல்ல வேண்டும் என நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் வீடு கட்டும் திட்டம், பிஎம் கிஷான் திட்டம் என மத்திய அரசின் நலத்திட்டங்களை பட்டியலிட்ட அவர், GST 2.0 மூலம் பல பொருள்களின் விலையை குறைத்தோம் என்றும் கூறியுள்ளார். ஆனால், போராட்டம் என்றதும் தான் தமிழக அரசு ஆவினில் விலையை குறைத்ததாகவும் விமர்சித்துள்ளார்.

News September 24, 2025

இனி மழைக்கும் தனி கட்டணம்.. வந்தாச்சு ‘Rain fee’

image

Swiggy & Zomato டெலிவரி App-ல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ‘Rain fee’ கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது. கடந்த 22-ம் தேதி முதல் டெலிவரி சேவைகளுக்கு 18% GST அமலானதை தொடர்ந்து, இந்த சேவை கட்டணத்தை Swiggy சேர்த்துள்ளதாக பலரும் விமர்சிக்கின்றனர். மேலும், GST-யால் இனி ‘வெயில் Fee’, ‘ரோடு பள்ளம் Fee’ போன்றவையும் வந்துவிடும் எனவும் சிலர் கிண்டலடித்து வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

error: Content is protected !!