News June 15, 2024

எத்தனை முறை வந்தாலும் வெற்றி கிடைக்காது

image

இந்தியாவில் 21 இடங்களில் பாஜக கூட்டணிக்கு டெபாசிட் போன ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என திமுகவின் காசிமுத்து மாணிக்கம் தெரிவித்துள்ளார். தமிழக பாஜகவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் செலவு செய்ய அதிக அளவு நிதி வழங்கப்பட்டதாக தெரிவித்த அவர், பிரதமர் மோடி 8 முறை பரப்புரை செய்தும், ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை என்றார். தமிழகத்தில் பாஜக தற்போது ஜூரோவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News March 5, 2026

வங்கி கணக்கில் ₹11,000… முதல்வர் அறிவித்தார்

image

புதுச்சேரியிலும் தேர்தல் வரவிருக்கும் நிலையில், அம்மாநில முதல்வர் ரங்கசாமி அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி, பயிறு வகைகள், எள்ளுக்கு ₹6,000, பாரம்பரிய நெல், வேர்க்கடலைக்கு ₹7,000, கரும்பு, பருத்தி உற்பத்தி செய்வோருக்கு மானியமாக ₹11,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட மானியம் 2026 -27 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 5, 2026

படிக்க காசு இல்லையா? இதோ அரசு திட்டம்!

image

உயர்கல்வி படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கு ₹10 லட்சம் வரை பிணையம் இல்லாமல் கடன் வழங்குகிறது மத்திய அரசின் PM வித்யாலட்சுமி கல்விக் கடன் திட்டம். மெரிட்டின் அடிப்படையில் சீட் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். வாங்கிய கடனை செலுத்தமுடியாமல் போனால், வட்டியில் 3% மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>க்ளிக்<<>> பண்ணுங்க. பிள்ளைகளின் படிப்புக்கு உதவும் இத்தகவலை SHARE பண்ணுங்க.

News March 5, 2026

BREAKING: பள்ளிகளில் தடை.. தமிழக அரசு உத்தரவு

image

தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் செய்து TN அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில், பிரிவினைகளை தூண்டும் நிகழ்ச்சி, கல்வி நோக்கத்திற்கு தொடர்பில்லாத நிகழ்ச்சி உள்ளிட்டவற்றை நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து தனியார் பள்ளிகளும் கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!