News March 22, 2025
வேலை பார்க்கும் மனைவிக்கு ஜீவனாம்சம் கிடையாது: SC

கணவருக்கு இணையாக வேலை பார்த்து ஊதியம் பெறும் மனைவிக்கு ஜீவனாம்சம் அளிக்க உத்தரவிட SC மறுத்துவிட்டது. கணவரிடம் விவாகரத்து பெற்ற மனைவி, ஜீவனாம்சம் கோரி மனு தொடுத்திருந்தார். அதற்கு கணவர் தரப்பில், மனைவியும் தன்னைப் போல ரூ.60,000 சம்பளம் பெறுகிறார் என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதத்தை கேட்ட SC, கணவருக்கு இணையாக மனைவி சம்பளம் வாங்குவதை சுட்டிக்காட்டி, மனுவை தள்ளுபடி செய்தது.
Similar News
News March 23, 2025
நடிகர் ராகேஷ் பாண்டே உடல் தகனம்

மாரடைப்பால் உயிரிழந்த பிரபல பாலிவுட் நடிகர் ராகேஷ் பாண்டேவின் உடல் மும்பையில் உள்ள சாஸ்திரி நகரில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு ஏராளமான திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். 1969இல் சினிமாவில் கால் பதித்த ராகேஷ் பாண்டே 2023 வரை ஈஷ்வர், தேவ்தாஸ், தில் சாஹ்தா ஹை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
News March 23, 2025
3 மாதங்களில் 1.24 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள்!

TNல் தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தச் சூழலில், கடந்த 3 மாதங்களில் மட்டும் 1.24 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் 4 பேர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். எனவே, தெருவில் நடக்கும்போது எச்சரிக்கையாக இருங்கள் மக்களே!
News March 23, 2025
ஏர் இந்தியாவை திட்டி தீர்த்த வார்னர்!

ஆஸி. கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஏர் இந்தியா நிறுவனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். ‘விமானி இல்லாத போது, விமானத்தில் பயணிகளை ஏற்றி மணிக்கணக்கில் காக்க வைப்பது ஏன் என ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டேக் செய்து அவர் கேள்வியை எழுப்பியுள்ளார். அவரின் பதிவு வைரலாக, பெங்களூருவின் மோசமான வானிலை காரணமாக, விமானம் நிறுத்தி வைக்கப்பட்டதாக ஏர் இந்தியா அவருக்கு பதிலளித்துள்ளது.