News August 18, 2024
சீனாவிற்கு அழைப்பு இல்லை

இந்தியா நடத்திய உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நேற்று நடைபெற்ற மாநாட்டில் உலகம் முழுவதும் மொத்தம் 123 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பருவநிலை மாற்றம், நவீன தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து காணொளி வாயிலாக நடைபெற்ற மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இது 3ஆவது உச்சி மாநாடாகும்.
Similar News
News November 9, 2025
விலை கிடுகிடுவென உயர்ந்தது

மீன் விலை இந்த வாரமும் கிடுகிடுவென உயர்ந்து அசைவ பிரியர்களை அதிர வைத்துள்ளது. காசிமேட்டில் முதல் தர வஞ்சிரம் 1 கிலோ ₹2,500-க்கும், கொடுவா ₹800-க்கும் விற்பனையாகிறது. பால் சுறா, சீலா, சங்கரா மீன் கிலோ தலா ₹600, பாறை ₹800, நெத்திலி – ₹400, நண்டு – ₹600, பண்ணா – ₹500-க்கு விற்பனையாகிறது. கடலூர், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மீன் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. உங்கள் ஊரில் என்ன விலை?
News November 9, 2025
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது!

SIR-க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், CM ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது. காலை 10 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் MP-க்கள், MLA-க்கள், தொகுதி பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில், SIR பணிகளை மேற்பார்வை செய்வது, பூத் கமிட்டி, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
News November 9, 2025
மழைக்காலத்திற்கு அவசியமான கசாயம்!

சுக்கு மல்லி கசாயம் சளி, இருமலை குறைத்து, செரிமானத்தை கூட்டி, எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் ★தேவையானவை: சுக்கு, மல்லி, சீரகம் ★செய்முறை: சுக்கு, மல்லி, சீரகத்துடன் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து, 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு, அதை ஆறவைத்து, வடிகட்டி தேவைக்கேற்ப பனைவெல்லம் சேர்த்து காலை, மாலை 2 வேளை பருகலாம். SHARE IT.


