News October 2, 2025
இந்தியா வேண்டாம்: கடிதம் எழுதிய பாக்.,

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா – பாக்., மோதும் விளையாட்டு போட்டிகள் இருநாடுகளை தவிர பிற நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் நடைபெறவுள்ள ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற பாக்., வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பிற்கும் பாக்., கடிதம் எழுதியுள்ளது. இரு அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் துபாயில் நடைபெற்றது.
Similar News
News October 2, 2025
இன்று காலையிலேயே பள்ளிக்கு கிளம்புங்க

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளும் திறந்திருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விஜயதசமியை முன்னிட்டு, அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் பணிக்கு வரவும் அறிவுறுத்தியுள்ளது. எனவே, பெற்றோர்கள் காலையிலேயே பள்ளிகளுக்கு சென்று தங்களின் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
News October 2, 2025
விஜய்யை ரொம்ப விமர்சனம் பண்ணியாச்சு: செல்லூர் ராஜூ

விஜய் அரசியலில் புதுமுகம்; அவரை ரொம்பவும் எல்லோரும் விமர்சனம் பண்ணியாச்சு என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தவெக கூட்டத்தை காவல்துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை; விஜய்யும் காலதாமதம் பண்ணியிருக்கக் கூடாது எனக் கூறிய அவர், இனி விஜய் மாவட்டத்துக்கு ஒரு இடத்தில் மட்டும் மக்களை சந்திக்காமல் தொகுதி வாரியாக சென்று சந்திக்கலாம் அல்லது பொதுவான ஒரு திடலில் கூட்டம் போடலாம் என்றார்.
News October 2, 2025
உட்கட்டாசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்

உட்கட்டாசனம் செய்வதால், கால்களுக்கு வலிமை கிடைக்கும். நரம்பு மண்டலம் சீராக இயங்கும். ஒரு நிமிடம் செய்தால் 4 கி.மீ., தூரம் நடந்த பலன் கிடைக்கும் *முதலில் நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும் *அடுத்து கைகளை நேராக தோள்பட்டை அளவிற்கு முன்னே நீட்டி, நாற்காலியின் மீது அமர்வது போல் உட்கார வேண்டும் *முதுகெலும்பு 90 டிகிரியில் இருக்க வேண்டும் *30 வினாடிகள் வரை இந்த நிலையில் இருக்கவும். SHARE.