News October 18, 2025
இவர்களுக்கு தீபாவளி விடுமுறை இல்லை

தீபாவளியன்று டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு விடுமுறை இல்லை என்றும் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய மருத்துவ அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், அசம்பாவிதம் ஏற்பட்டால் dphei@nic.in என்ற மின்னஞ்சலுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News April 9, 2026
வீட்டு சிலிண்டர்.. அரசு புதிய அறிவிப்பு

கேஸ் தட்டுப்பாடு இருப்பதாக தகவல் பரவிவரும் நிலையில், மத்திய அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் 100% உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், LPG விநியோகத்தில் எந்த தட்டுப்பாடும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உங்க பகுதியில் கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளதா?
News April 9, 2026
முடி அடர்த்தியா வளர இந்த 2 பொருள்கள் போதும்

உங்களுக்கு அதிகம் முடி கொட்டுகிறதா? உங்கள் கவலையை போக்க முட்டை, தயிர் இருந்தால் போதும். இவற்றில் உள்ள பயோட்டினும் புரோட்டீனும் முடி உதிர்வை தடுக்க உதவும். இதற்கு முட்டையின் வெள்ளைக் கரு, 1 ஸ்பூன் தயிர் இரண்டையும் கலந்து, குளிப்பதற்கு 1 மணிநேரம் முன்பே தலையில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். அதன்பின் சீயக்காய் தேய்த்து குளியுங்கள். வாரம் இருமுறை இதை செய்துவர முடி உதிர்வு நின்று வளர்ச்சி அதிகரிக்கும்.
News April 9, 2026
திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் சோக முடிவு

ஆசை ஆசையாய் வளர்த்த மகள், திருமணமான ஒரே மாதத்தில் சடலமாகக் கிடந்தால் பெற்றோருக்கு எப்படி இருக்கும்? அப்படியொரு சோக சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. பிறந்த வீட்டிற்கு கணவருடன் விருந்துக்குச் சென்ற தேவிஸ்ரீ(19) ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பெரும் சோகம். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.


