News August 25, 2024
பொறியியல் தேர்வு கட்டண உயர்வு இல்லை : பொன்முடி

பொறியியல் தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தற்போது கட்டக்கூடிய தேர்வு கட்டணமே இனி நடைமுறையில் இருக்கும் .தேர்வு கட்டணத்தை உயர்த்துவது மாணவர்களை பாதிக்கும் என்பதால், தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டும், வரும் ஆண்டும், இனி வரக்கூடிய நாட்களிலும் தேர்வு கட்டணம் அதிகரிக்காது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Similar News
News December 31, 2025
சிவகங்கையில் போலீஸ் மீது தாக்குதல்!

சிவகங்கை தாலுகா சார்பு ஆய்வாளர் சக்திவேல், காவலர் சூர்யகுமார் உள்ளிட்ட போலீசார் நாட்டரசன்கோட்டையில் குற்றப்பதிவேடு குற்றவாளியான ஆலடியார் தெருவை சேர்ந்த ஈஸ்வரனை கண்காணிக்க சென்றனர். அப்போது ஈஸ்வரன் எஸ்.ஐ., மற்றும் உடன் இருந்த போலீசாரை அசிங்கமாக பேசி கையில் வைத்திருந்த கட்டையால் தாக்கினார். போலீசார் அவரை கைது செய்தனர்.
News December 31, 2025
தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயரும் போதெல்லாம், <<18696997>>பெரும் சரிவை சந்திக்கும்<<>> என்பதே நிபுணர்கள் கணிப்பு. தற்போதும் அதுதான் நடக்கிறதோ என தோன்றுகிறது. தொடர் உச்சத்தில் இருந்த தங்கம் விலை, 2 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹4,000 குறைந்திருக்கிறது. தற்போது, 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹1,00,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றும் தங்கம், வெள்ளி விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 31, 2025
காலையில் எழுந்ததும் முதல் விஷயமா இத பண்ணுங்க!

காலையில் தூங்கி எழுந்ததும் கட்டிலில் இருந்து காலை கீழே வைப்பதற்கு முன்பாக, Stretches (உடலை நீட்டி வளைப்பது செய்ய நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். சாதாரணமாக சோம்பல் முறிக்காமல், கை விரல் நுனி முதல் கால் விரல் நுனி வரை ஒவ்வொரு அசைவையும் உணர்ந்து உடலை நன்கு வளைத்து நெளித்து செய்ய இதை வேண்டும். இப்படி செய்யும்போது, உடல் சோர்வு நீங்கி மனதில் உற்சாகம் ஏற்படும். இன்னைக்கே ட்ரை பண்ணுங்க.


