News May 18, 2024
அரசியலமைப்பை எந்த அரசாலும் மாற்ற முடியாது

பாஜக அரசியலமைப்பை மாற்ற துடிப்பதைப் போல காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்வதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், அம்பேத்கர் வடிவமைத்த அரசியலமைப்பை எந்த அரசாலும் மாற்ற முடியாது என்றார். சட்டப் பிரிவுகளில் திருத்தத்தை மட்டுமே மேற்கொள்ள முடியும் என விளக்கிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் 80 முறை சட்டத் திருத்தம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
Similar News
News March 8, 2026
ஏசியை பயன்படுத்தினாலும் மின்சாரத்தை சேமிக்கலாம்!

பல இடங்களில் வெயில் உச்சத்தை எட்டிவரும் நிலையில், வீட்டில் AC பயன்படுத்துவது அவசியமாக மாறியுள்ளது. இந்நிலையில் மிக குறைந்த மின்சாரத்தில் AC-யை பயன்படுத்த நிபுணர்கள் கூறும் டிப்ஸ் இதோ. *AC பயன்படுத்தும்போது கதவுகள், ஜன்னல்களை மூடுவது அவசியம். *எங்கிருந்தும் இயக்கும் வகையில் ஸ்மார்ட் தெர்மோஸ்டாட்களை பயன்படுத்த வேண்டும். *Eco mode, Energy Saving mode போன்றவற்றின் மூலமும் மின்சாரத்தை சேமிக்கலாம்.
News March 8, 2026
பெண் இனத்திற்கே தலைகுனிவு: பிரேமலதா

பிறந்த சில நாள்களே ஆன <<19313133>>நாய்குட்டிகளை ஒரு பெண் சுவற்றில் தூக்கி அடித்து கொலை<<>> செய்த சம்பவம் தன் மனதை ஆழமாக உலுக்கியுள்ளதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். அப்பெண் கைது செய்யப்பட்டிருந்தாலும், அச்செயலின் கொடுமை ஒட்டுமொத்த மனிதநேயத்திற்கே கேள்விக்குறியாக உள்ளது என்றும், பெண் இனத்தைச் சேர்ந்த ஒருவரால் ஒரு வாயில்லா ஜீவனின் உயிர் இவ்வளவு கொடூரமாக பறிக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது எனவும் கூறியுள்ளார்.
News March 8, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


