News March 25, 2025
குணால் கம்ரா மீது தவறில்லை: உத்தவ் தாக்கரே

ஸ்டாண்ட்-அப் காமெடியன் குணால் கம்ரா எந்த தவறும் செய்யவில்லை என்று சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பொதுமக்களின் கருத்தை தான் குணால் கம்ரா வெளிப்படுத்தினார் என்றும், தனிப்பட்ட ரீதியில் அவர் யாரையும் விமர்சிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்களால் குணால் கம்ராவின் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சேதத்துக்கு அரசு இழப்பீடு வழங்கவும் அவர் வலியுறுத்தினார்.
Similar News
News March 27, 2025
சினிமாவில் நடிக்கும் கோலி?

மேலே உள்ள போட்டோவைப் பார்த்தும், என்னது கோலி சினிமாவில் நடிக்கிறாரா? என அதிர்ச்சியாக வேண்டாம். அது துருக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் டோகன் பே. Ertugrul எனும் துருக்கிய சீரிஸில் இருந்து புகைப்படம் ஒன்றை ஸ்னாப் அடித்து, பயனர் ஒருவர் பதிவிட சமூகவலைதளம் ஆடிப்போனது. முதலில் பலரும் இவரை கோலி என்றே நினைத்தனர். பின்னரே உண்மை தெரியவந்தது. இருவரின் முக ஒற்றுமை எப்படி இருக்கு? நீங்க சொல்லுங்க.
News March 27, 2025
அப்பாவின் சந்தேகத்திற்கு பலியான பிஞ்சுக் குழந்தை

‘கருப்பான நமக்கு எப்படி வெள்ளை நிற குழந்தை பிறந்தது’ என மனைவியை டார்ச்சர் செய்த கணவர், பெற்ற மகளையே கொலை செய்துள்ளார். சென்னையைச் சேர்ந்த அக்ரம் ஜாவித்தின் மனைவி, இரண்டரை ஆண்டுக்கு முன்பு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இருவரும் கருப்பாக இருந்த நிலையில், குழந்தை வெள்ளையாக இருந்துள்ளது. இதனால், மனைவியை தொடர் சித்ரவதை செய்துவந்த அவர், குழந்தையை கொன்றுவிட்டு இப்போது கம்பி எண்ணுகிறார்.
News March 27, 2025
கண்ணை பறிக்கும் சல்மான் கான் வாட்ச்.. விலை ₹61 லட்சமா?

ஏ.ஆர்.முருகதாஸ் – சல்மான்கான் கூட்டணியில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் வரும் 30ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்கான புரோமோஷன் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ள நிலையில் அவர் கையில் கட்டியுள்ள வாட்ச் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ராம் ஜென்மபூமி பிரத்யேக எடிசன் வாட்ச்சான இதன் விலை ₹61 லட்சம். Jacob & Co என்ற பிரபலமான வாட்ச் பிராண்ட் இதனை வடிவமைத்துள்ளது.