News August 16, 2024
வாக்குப்பதிவுக்கான சூழல் வயநாட்டில் இல்லை: CEC

வயநாட்டில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லையென, CEC ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார். வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியான ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் தேதி இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு வாக்குப்பதிவு நடத்துவதற்கான சூழல் இல்லை என்றார். விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் கூறினார்.
Similar News
News August 15, 2025
6 ஆண்டுகளில் 200% உயர்ந்த தங்கம்.. முதலீட்டுக்கு ஏற்றதா?

2019-ல் ₹30,000-க்கு விற்ற 24 கேரட் 10 Gram தங்கம் 200% உயர்ந்து தற்போது ₹1,01,340-யை தொட்டுள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 18% உயர்ந்து வருகிறது. ரஷ்யா – உக்ரைன், ஈரான் – இஸ்ரேல் போர்கள், கொரோனா காலத்தில் பொருளாதார சரிவு உள்ளிட்டவை முதலீட்டாளர்களின் கவனத்தை தங்கத்தின் பக்கம் ஈர்த்ததாகவும், இது அடுத்த 5 ஆண்டுகளில் ₹2.25 லட்சம் வரை உயரலாம் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். உங்கள் கருத்து?
News August 15, 2025
தேசியக் கொடி முதலில் எங்கு, யாரால் ஏற்றப்பட்டது தெரியுமா?

சுதந்திர தினத்தில் எங்கும் நிறைந்திருக்கும், தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார் என தெரியுமா? 1921-ல் பிங்காலி வெங்கையா இன்று நாம் பயன்படுத்தும் மூவர்ணக் கொடியை வடிவமைத்தார். இந்தியாவில் முதன் முதலில், டிசம்பர் 30, 1943-ல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் மூவர்ணக் கொடி அந்தமானின் போர்ட் பிளேயரில் ஏற்றப்பட்டது. இந்த இடத்தை ஆங்கிலேயரின் பிடியில் இருந்து விடுவிப்பதாக கூறி, நேதாஜி கொடி ஏற்றி இருந்தார்.
News August 15, 2025
காதர் மொய்தீன்கானுக்கு தகைசால் தமிழர் விருது

79-வது சுதந்திர தின விழாவில் IUML தலைவரும், பேராசிரியருமான காதர் மொய்தீன்கானுக்கு தகைசால் தமிழர் விருதை CM ஸ்டாலின் வழங்கினார். மேலும், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. அதேபோல், அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் நாட்டின் வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றியதற்காக இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.