News March 17, 2024

தங்கம் இறக்குமதிக்கு வரி இல்லை

image

தங்கம் இறக்குமதி தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு நற்செய்தியை அளித்துள்ளது. இறக்குமதி வரி செலுத்தாமல் தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகிலேயே தங்கத்திற்கு அதிக அளவில் நுகர்வோர் கொண்ட நாடுகளில் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில உள்ளது. நம் நாட்டில் தங்கம் இறக்குமதிக்கு 15% வரி செலுத்த வேண்டும். மத்திய அரசின் சமீபத்திய முடிவால், இனி வரிச்சுமை குறையும்.

Similar News

News April 5, 2025

இந்திய பாதுகாப்புக்கு இலங்கை அதிபர் உறுதி!

image

இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையில், எந்த செயலும் இலங்கை மண்ணில் நடக்காது என அதிபர் அநுர குமார திசநாயக உறுதியளித்துள்ளார். இலங்கையின் தனித்துவ டிஜிட்டல் சேவைக்காக இந்தியா வழங்கிய ₹300 கோடி நிதிக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். டிஜிட்டல் பொருளாதார மேம்பாட்டின் முக்கியத்துவத்தையும் இலங்கை நன்கு உணர்ந்துள்ளது என்றார்.

News April 5, 2025

கிறிஸ்தவர்களை குறிவைக்கும் RSS : ராகுல் குற்றச்சாட்டு

image

இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்ஃப் மசோதா, எதிர்காலத்தில் பிற பிரிவினரை குறிவைக்க முன்மாதிரியாக உள்ளது என்று மக்களவையில் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். RSS-ன் கவனம், கிறிஸ்தவர்கள் மீது திரும்ப நீண்ட நேரம் ஆகாது; பாஜக அரசின் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் ஒரே கேடயம் அரசியலமைப்புச் சட்டம்தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

News April 5, 2025

சற்றுமுன்: பள்ளியிலேயே மாணவி மரணம்

image

தென்காசி மாவட்டம் சுரண்டையில், பள்ளியிலேயே மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் உயிரிழந்த 9ஆம் வகுப்பு மாணவி மானசாவின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

error: Content is protected !!