News June 25, 2024

தமிழ்நாட்டில் போதைப்பொருள் இல்லையா?: ஆளுநர்

image

போதைப்பொருள் புழக்கம் குறித்து தமிழ்நாடு அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் உள்ளது? என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப்பொருளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கூறிவருவதாகவும், ஆனால், போதைப்பொருள் இல்லையென அதிகாரிகள் கூறிவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் போதைப்பொருள் இல்லை என்ற மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும் என்றார்.

Similar News

News November 19, 2025

BREAKING: அதிமுக கூட்டணியில் இணைந்தனர்

image

2026-ல் வலுவான கூட்டணியை அமைக்க திட்டமிட்டு, பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் அதிமுக தலைமை பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இந்நிலையில், ராஜகம்பள சமுதாய நலச் சங்க மாநிலச் செயலாளர் செந்தில்குமார், வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத் தலைவர் P.S. மணி உள்ளிட்டோர் EPS-ஐ சந்தித்தனர். அப்போது 2026 தேர்தலில் அதிமுகவுக்கு தங்கள் சங்கங்களின் முழு ஆதரவை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

News November 19, 2025

எந்த மாநிலத்தில் தபால் வாக்குகள் அதிகம் தெரியுமா?

image

நேரில் வந்து வாக்களிக்க இயலாத தேர்தல் பணியாளர்கள், போலீசார், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் தபால் மூலம் வாக்குகளை செலுத்துகின்றனர். இந்நிலையில், இந்தியாவிலேயே அதிகமாக ஆந்திராவில் சுமார் 5.12 லட்சம் தபால் வாக்குகள் 2024 தேர்தலில் பதிவாகியுள்ளன. 2-வது இடத்தில் உள்ள ராஜஸ்தானில் 3.76 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், சுமார் 3.11 லட்சம் தபால் வாக்குகளுடன் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.

News November 19, 2025

எப்ஸ்டீன் ஆவண மசோதா: உடையுமா டிரம்ப்பின் ரகசியம்?

image

USA-வை உலுக்கிய பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களை வெளியிடும் மசோதாவை, USA காங்., ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளில் டிரம்ப், எலான் மஸ்க் உள்பட பலர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக டிரம்ப் இதை வெளியிட எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பின்னர் ஒப்புக்கொண்டார். டிரம்ப் கையெழுத்துக்காக மசோதா அனுப்பப்பட்டுள்ள நிலையில், பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!