News October 26, 2024

லாலு, நிதிஷ் ஆட்சிக்கு இடையே வித்தியாசமில்லை: பி.கே.

image

பிகாரில் லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார் ஆட்சியில் எந்த வேறுபாடுமில்லை என்று ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிசோர் விமர்சித்துள்ளார். லாலு பிரசாத் ஆட்சியில் கிரிமினல்கள் துப்பாக்கியை காட்டி மக்களிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டதாகவும், நிதிஷ் ஆட்சியில் அதிகாரிகள் கொள்ளையடிப்பதாகவும் அவர் சாடியுள்ளார். நிதிஷ் ஆட்சியில் பிகாரில் அதிகாரிகளின் காட்டாட்சி நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 15, 2026

உயிருடன் இருப்பதை உறுதி செய்ய APP அறிமுகம்

image

சீனாவில் தனிமையில் தவிப்பவர்கள் Hikikomori என்ற வருத்தத்திற்குரிய Trend-ஐ பின்பற்றுகின்றனர். இவர்கள் ஒரு அறைக்குள் தங்களை மாதக்கணக்காக பூட்டிக்கொள்கின்றனர். பிறகு உணவு தீர்ந்து பசியில் வாடி இறக்கின்றனர். பேசவும் யாருமில்லாததால் இறந்தால் கூட தாமதமாகவே தெரியவருகிறது. எனவே, இதற்காக ஒரு APP-ஐ அறிமுகப்படுத்தும் நிலைக்கு சீனா வந்துள்ளது. நம்மூரில் இந்நிலை வராமலிருக்க நண்பர்களிடம் அடிக்கடி பேசுங்க.

News January 15, 2026

இந்தியா இதை நிரூபித்து காட்டியுள்ளது: PM மோடி

image

நமது நாடு, பன்முகத்தன்மையை ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலமாக மாற்றியுள்ளதாக PM மோடி கூறியுள்ளார். காமன்வெல்த் மாநாட்டில் பேசிய அவர், இந்தியா சுதந்திரம் பெற்றபோது, பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் ஜனநாயகம் நிலைத்திருக்க முடியுமா என்ற சந்தேகம் சர்வதேச அளவில் எழுந்ததாக குறிப்பிட்டார். ஆனால், அந்த அச்சங்களை இந்தியா இன்று தவறு என்று நிரூபித்து காட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News January 15, 2026

பொங்கல் நாள்: தங்கம், வெள்ளி.. விலை ₹3,000 மாற்றம்

image

பொங்கல் நாளான இன்றும் கூட <<18862348>>தங்கத்தை போலவே<<>> வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் 1 கிராம் ₹3 உயர்ந்து ₹310-க்கு விற்பனையாகிறது. மொத்த விற்பனையில் பார் வெள்ளி 1 கிலோவுக்கு ₹3,000 உயர்ந்து ₹3,10,000-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையைப் பொறுத்தவரையில் கடந்த 15 நாள்களில் மட்டும் கிலோவுக்கு ₹54,000 அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!