News October 30, 2025
Currency, Airport இல்லை.. ஆனால் உலகின் பணக்கார நாடு இது!

லிச்சென்ஸ்டீன் (Liechtenstein) சுவிட்சர்லாந்தின் நாணயத்தையே பயன்படுத்துகிறது. 38,000 பேர் மட்டுமே வசித்தாலும், தனிநபர் ஆண்டு வருமானம் சுமார் ₹1.75 கோடியாம். இது USA, ஜப்பானை விட அதிகம். வரி குறைவு என்பதால், பல முன்னணி நிறுவனங்களும் இங்கு தொழில் தொடங்குகின்றன. மேலும், உயர் கல்வி & தொழில்நுட்பத்தில் முன்னேற்றம், வலுவான வங்கித் துறை ஆகியவற்றால் ஐரோப்பாவின் 2-வது பணக்கார நாடாக லிச்சென்ஸ்டீன் உள்ளது.
Similar News
News October 30, 2025
SC தலைமை நீதிபதியாக சூரியகாந்த் நியமனம்

சுப்ரீம் கோர்ட்(SC) தலைமை நீதிபதியாக சூரியகாந்தை நியமனம் செய்து, ஜனாதிபதி திரௌபதி முர்மு அறிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக உள்ள பி.ஆர்.கவாய், வரும் 23-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக உள்ள சூரியகாந்தை புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்து, கவாய், கடந்த வாரம் ஜனாதிபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
News October 30, 2025
BREAKING: CBSE பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

2025 – 2026 கல்வியாண்டுக்கான CBSE 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் 17.02.2026 அன்று பொதுத்தேர்வானது தொடங்க உள்ளது.
News October 30, 2025
PAK எல்லையில் இந்திய முப்படைகள் பயிற்சி

பாகிஸ்தான் எல்லையில் இந்திய முப்படைகள் ‘திரிசூல்’ பயிற்சியை தொடங்கியுள்ளன. குஜராத் – ராஜஸ்தான் இடையே, குறிப்பாக ரான் ஆஃப் கட்ச் பகுதியில் 12 நாள்கள் தொடர்ந்து இப்பயிற்சி நடைபெற உள்ளது. குஜராத்தில் உள்ள சர்ச்சைக்குரிய சர் கிரீக் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்கும் நிலையில், இந்திய ராணுவம் பயிற்சியை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


