News April 11, 2025
அண்ணாமலையை மாற்ற நிர்ப்பந்தமில்லை: அமித் ஷா

அண்ணாமலையை மாற்ற அதிமுக நிர்ப்பந்தம் எதுவும் அளிக்கவில்லை என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை என எக்ஸ் பக்கத்தில் நீங்கள் பதிவிட்டபிறகே, உங்களை சந்திக்க இபிஎஸ் புறப்பட்டதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அமித் ஷா, இன்னும் அண்ணாமலைதான் தலைவராக உள்ளார், அதனால்தான் எனது அருகில் அவர் அமர்ந்துள்ளார் எனக் கூறினார்.
Similar News
News December 12, 2025
சுற்றுலா மூலம் சம்பாதிக்கும் நாடுகள்

இந்தியா உள்பட பல நாடுகள் சுற்றுலா துறையை மேம்படுத்தி அதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்து வருகின்றன. சுற்றுலா என்பது பயணத்தையும் தாண்டி, தற்போது மிகப்பெரிய தொழில்துறையாக வளர்ந்து வருகிறது. அதன்படி, எந்தெந்த நாடுகள், எவ்வளவு வருவாய் ஈட்டுகின்றன என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.
News December 12, 2025
மகளிர் உரிமைத் தொகை உயர்வு: ஸ்டாலின் அறிவிப்பு

மகளிர் உரிமைத்தொகை 2-ம் கட்ட விரிவாக்கத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து பேசிய அவர், நிச்சயம் மகளிர் உரிமைத் தொகை உயரும், மகளிரின் உரிமையும் உயரும் என தெரிவித்துள்ளார். இதன்படி, ₹1,000 உரிமைத்தொகையை விரைவில் உயர்த்தி வழங்கும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, 2026 தேர்தலையொட்டி, ₹2,000 – ₹2,500 வரை உரிமைத் தொகையை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
News December 12, 2025
நீங்கள் இதில் படம் பார்த்தது உண்டா? Must feel..

இன்று OTT-யில் படம் பார்த்து வரும் நாம், முன்னதாக டிவியில் படம் பார்த்தோம். அப்போது, DVD-க்களில் படங்களை கண்டு களித்திருப்போம். பெற்றோரிடம் அடம்பிடித்து ₹20, ₹40 ரூபாய்க்கு சிடி வாங்கி படம் பார்த்த காலங்கள் அழகானவை. இதற்காக டிவிடி பிளேயர் வாங்கி, அதிலுள்ள மஞ்சள், சிவப்பு, வெள்ளை ஒயரை சரியாக கனெக்ட் செய்வதில் நாம் தான் கிங் என்று கூட நினைத்திருப்போம். நீங்கள் கடைசியாக சிடியில் பார்த்த படம் எது?


