News January 2, 2025
சிறு சேமிப்பு வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை

மத்திய அரசின் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. PPF, SSY, SCSS ஆகிய திட்டங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட வட்டியே ஜனவரி முதல் மார்ச் வரை வழங்கப்படவுள்ளது. பணவீக்கம் அதிகமாக உள்ளதால் சிறு சேமிப்பு வட்டியில் மாற்றம் வரும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
Similar News
News September 14, 2025
மடியில் குழந்தையுடன் DSP இன்டர்வியூ வந்த பெண்!

தாய் பாசத்தை வெல்ல இந்த உலகில் வேறெதுவும் இல்லை என்பதற்கு இந்த சம்பவமும் சான்று. ம.பி.யின் Public Service Commission நேர்காணலில், வர்ஷா படேல் தனது 20 நாட்களே ஆன குழந்தையை மடியில் தாங்கியபடி பங்கேற்றுள்ளார். கர்ப்பமாக இருந்தபோது தேர்வெழுதி 11-வது ரேங்க் பிடித்த வர்ஷா, குழந்தையுடனே நேர்காணலை சந்தித்தார். தாயாகிய உறுதியும், பெண்மையின் சக்தியும் ஒருசேர அவர் DSP-யாக தேர்வாகி இருக்கிறார்.
News September 14, 2025
BREAKING: முடிவை மாற்றினார் இபிஎஸ்.. முக்கிய அறிவிப்பு

நாளை மறுநாள், EPS டெல்லி செல்வதால் தருமபுரி சுற்றுப்பயண தேதி மாற்றப்பட்டுள்ளது. அதிமுக ஒன்றிணைப்பு விவகாரம் தொடர்பாக, செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில், EPS-ம் டெல்லி செல்ல உள்ளார். இதனால், அதிமுக ஒன்றிணைப்பு விவகாரம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. தருமபுரி மாவட்ட சுற்றுப்பயணம் வரும் 17 மற்றும் 18-ம் தேதிகளுக்கு பதிலாக 28, 29-ம் தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
News September 14, 2025
வருத்தம் தெரிவித்தார் விஜய்

பெரம்பலூரில் மக்களிடையே பேசாமல் சென்றதற்காக விஜய் வருத்தம் தெரிவித்துள்ளார். நிச்சயமாக மீண்டும் வேறொரு நாளில் பெரம்பலூர் மக்களை சந்திக்க வருவேன் என்று அவர் உறுதியளித்துள்ளார். திருச்சி, அரியலூரில், தேர்தல் பரப்புரையை கேட்க வந்த தொண்டர்கள், பொதுமக்களுக்கு நன்றி கூறியுள்ளார். மேலும், பரப்புரைக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததாக, அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களையும் விஜய் பாராட்டியுள்ளார்.