News December 6, 2024

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை

image

வங்கிகளுக்கு RBI அளிக்கும் கடன் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளாா். ரெப்போ வட்டி விகிதம் தற்போது 6.5%ஆக உள்ளது. கொரோனாவுக்குப் பின் ரெப்போ வட்டி விகிதம் கடுமையாக உயர்த்தப்பட்டதால், லோன் வாங்கியோர் அதிக வட்டி செலுத்தி வருகின்றனர். அவர்களுக்காக வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிர்ச்சியே மிஞ்சியிருக்கிறது.

Similar News

News November 2, 2025

சபரிமலை செல்ல சிறப்பு ரயில்!

image

சபரிமலை மண்டல பூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நவ.14 முதல் ஜன.16 வரை 2 மாதங்களுக்கு இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும். வெள்ளி இரவு 11.55-க்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 4.30-க்கு கொல்லத்தை அடையும். மறுமார்க்கத்தில் சனி இரவு 7.35-க்கு புறப்பட்டு, நண்பகல் 12 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

News November 2, 2025

உலகக்கோப்பை ஃபைனல்: மழையால் ஆட்டம் தாமதம்

image

மகளிர் ODI உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இன்று தென்னாப்பிரிக்கா – இந்தியா அணிகள் மோதுகின்றன. இதன் போது மழை குறுக்கிட்டதால், போட்டி தாமதமாகிறது. இன்று முழுவதும் மழை பெய்தால், போட்டி நாளை நடைபெறும். தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த லீக் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. இந்நிலையில், இறுதிப்போட்டியில் வென்று இந்திய மகளிர் அணி வாகை சூடுமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

News November 2, 2025

சற்றுமுன்: செங்கோட்டையன் புதிய முடிவெடுத்தார்

image

அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என நேற்று அறிவித்த நிலையில், இன்று மாலை சட்ட வல்லுநர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை செய்கிறார். ஆலோசனைக்குபின், நாளை அவரது தரப்பில் வழக்கு தொடரப்படும் என தெரிகிறது. இதனைத்தொடர்ந்து, நவ.5-ல் OPS, TTV, செங்கோட்டையன் இணைந்து ஆதரவாளர்களையும், பிரிந்து சென்றவர்கள் மற்றும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களையும் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!