News March 29, 2024
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டை போலவே, ஏப் முதல் ஜூன் வரையிலான காலாண்டிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது, கிசான் விகாஸ் பத்திரம் 7.5% வட்டி, பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட்(PPF) 7.1% வட்டி, சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டம் 8.2% வட்டி, சுகன்யா சம்ரிதி அக்கவுண்ட் 8.2% வட்டி வழங்கப்படுகிறது.
Similar News
News March 19, 2026
இந்தியாவின் வீர மகன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

காஷ்மீரில் நாட்டை காக்கும் பணியில் இருந்த மக்கள் நாயகன் ஒருவரை தாய்த்திரு நாடு இழந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி சந்தீப் குமார் தாக்கா, பூஞ்ச் மாவட்டத்தின் எல்லையோர பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது மரணமடைந்தார். இதையடுத்து, அந்த வீரனுக்கு ராணுவ மரியாதை செய்யப்பட்டு, தேசியக்கொடி போர்த்திய உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. RIP
News March 19, 2026
பத்திரிகையாளர்களுக்கும் தபால் வாக்கு: ECI

வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு (ஏப்.23) 15 நாள்களுக்கு முன்பே பூத் நிலை அலுவலர்கள் (BLO) மூலம் முதியோர், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தலாம் என ECI தெரிவித்துள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களும் தபால் வாக்கு செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், தபாலில் வாக்களிப்போர் தபால் செலவை ஏற்க வேண்டிய தேவையில்லை என்றும் ECI தெரிவித்துள்ளது.
News March 19, 2026
தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.. மக்கள் மகிழ்ச்சி

பிப்ரவரியில் உச்சத்தில் இருந்த தங்கம் விலை மார்ச்சில் தலைகீழாக மாறியுள்ளது. ஏற்கெனவே சவரனுக்கு <<19426387>>₹15,000 குறைந்துள்ள<<>> நிலையில், மேலும் ₹4,000 வரை குறையக்கூடும் என நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் பக்கம் முதலீட்டாளர்கள் கவனம் சென்றதே தங்கம் விலை குறைய காரணமாம். போர் முடிந்தபின், தங்கம் விலை மீண்டும் உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளதாம்.


