News February 28, 2025
EPF வட்டியில் மாற்றமில்லை

2024-25 நிதியாண்டுக்கான வருங்கால வைப்புநிதி (EPFO) வட்டி விகிதம் மாற்றமின்றி 8.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டு 8.15 சதவீதமாக இருந்த EPFO வட்டி, கடந்த ஆண்டு 0.10% உயர்த்தப்பட்டது. 2015-16ஆம் ஆண்டு 8.8 சதவீதமாக இருந்த EPFO வட்டி படிப்படியாக குறைந்து, தற்போது இந்நிலைக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 7 கோடி பயனர்கள் இந்த EPFO திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர்.
Similar News
News February 28, 2025
சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்கிய இந்தியா

கடந்த 20 ஆண்டு காலமாக சீனாவின் பிடியில் இருந்த எலக்ட்ரானிக்ஸ் சந்தையை இந்தியா தன்வசப் படுத்தியிருக்கிறது. ஆப்பிள் நிறுவன பொருட்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டும் இந்தியா, அதனை சீனா & வியட்நாம் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியையும் தொடங்கியிருக்கிறது. உலக வர்த்தகத்தில் முக்கியமான இந்த மைல்கல் மூலம் எலக்ட்ரானிக்ஸ் சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தை இந்தியா ஒடுக்கியுள்ளது.
News February 28, 2025
EX உலக செஸ் சாம்பியன் ஸ்பாஸ்கி காலமானார்

EX உலக செஸ் சாம்பியன் போரீஸ் ஸ்பாஸ்கி (88) காலமானார். ரஷ்யாவை சேர்ந்த அவர், பனிப்போர் காலத்தில் செஸ் உலகில் உச்சத்தில் இருந்தார். உலக ஜூனியர் சாம்பியன், இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று அசத்திய அவர், 1969இல் உலக சாம்பியன் பட்டத்தை வென்று 1972 வரை அதை தக்க வைத்திருந்தார். 1972இல் அமெரிக்க வீரர் பாபி பிஷ்ஷரால் தோற்கடிக்கப்பட்டார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News February 28, 2025
இன்றே கடைசி நாள்.. ரயில்வேயில் 1,036 Vacancy!

ரயில்வேயில் RRBயின் மூலமாக 1,036 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. முதுகலை ஆசிரியர்கள், தலைமை சட்ட உதவியாளர், பொது வழக்கறிஞர்கள் போன்ற பதவிகளுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி வழி மூலம் தேர்ச்சி நடைபெறும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். வேலைக்கேற்ப ₹35,400 – ₹47,900 வரை சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <