News December 30, 2024
மன்சூர் அலிகான் மகனுக்கு ஜாமீன் இல்லை!

கஞ்சா, மெத்தமட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தியதாக நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், அலிகான் துக்ளக்கின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
Similar News
News March 12, 2026
WhatsApp-ல் குழந்தைகளுக்காக புது வசதி!

13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அக்கவுண்ட்களை பெற்றோர் மேற்பார்வையிடும் வசதியை WhatsApp அறிமுகம் செய்துள்ளது. குழந்தைகளின் WhatsApp அக்கவுண்ட் உடன் QR மூலம் பெற்றோர்கள், தங்கள் அக்கவுண்ட்டையும் இணைக்கலாம். அப்போது பெற்றோர்களுக்கு 6 இலக்க PIN கிடைக்கும். இதன்மூலம், குழந்தைகளின் Chat-ல் ஒருவரை சேர்ப்பது, தடை செய்வது ஆகியவற்றை பெற்றோர்களே செய்யலாம். குழந்தைகள் Calls & Messages மட்டுமே செய்ய முடியும்.
News March 12, 2026
இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது தாக்குதல்!

இந்தியாவுக்கு 30,000 டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. UAE-ல் இருந்து குஜராத்தின் கண்ட்லா துறைமுகம் நோக்கி புறப்பட்ட தாய்லாந்து கப்பல் மீது ஹார்முஸ் நீரிணையில் வைத்து தாக்குதல் நடந்துள்ளது. எனினும் எரியும் கப்பலில் இருந்து 20 ஊழியர்கள் தப்பினர். ஏற்கெனவே பெட்ரோல், டீசல் குறித்த அச்சம் நாட்டில் தலைவிரித்தாடும் நிலையில், இத்தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News March 12, 2026
IPL: அனைத்து போட்டிகளிலும் தோனி விளையாடுவாரா?

டி20 WCல் சிஎஸ்கே வீரர்கள் சஞ்சு & துபே இருவரும் சிறப்பாக செயல்பட்டதால் தாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம் என அந்த அணியின் CEO காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அப்போது தோனி குறித்து பேசிய அவர், IPL 2026 சீசனின் அனைத்து போட்டிகளிலும் தோனி பங்கேற்பார்; அதேநேரம் அவர் விக்கெட் கீப்பராக விளையாடுவாரா? இம்பேக்ட் பிளேயராக விளையாடுவாரா? என்பதை அணி கிரிக்கெட் தலைமை முடிவு செய்யும் எனவும் கூறியுள்ளார்.


