News March 16, 2024
வாய் துர்நாற்றம் வரவே வராது

இந்த 6 வழிமுறைகளை கடைபிடியுங்கள், வாழ்நாளில் வாய் துர்நாற்றம் நெருங்கவே நெருங்காது. 1) தினமும் காலை, இரவு என 2 முறை கட்டாயம் பல் துலக்குங்கள் 2) ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் பல் துலக்குங்கள் 3) நாக்கை தினமும் சுத்தப்படுத்துங்கள் 4) சரியான உணவு முறையை கடைபிடியுங்கள் 5) குறிப்பிட்ட நாள் இடைவெளியில் பிரஷ்ஷை மாற்றுங்கள் 6) பல் மருத்துவரிடம் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்யுங்கள்.
Similar News
News August 17, 2025
திருமா மரியாதையை காப்பாத்தனும்: EPS அறிவுரை

திமுகவின் பாவமூட்டைகளை திருமாவளவன் சுமக்க வேண்டாம் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். செங்கம் பகுதியில் மக்கள் மத்தியில் பேசிய அவர், மக்கள் மத்தியில் திருமாவளவனுக்கு ஒரு மரியாதை உள்ளது என்றும், அதனை அவர் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றார். சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துவிட்டு, வேறு வழியின்றி அவர்கள் சொல்வதை எல்லாம் திருமாவளவன் பேசுவதாகவும் தெரிவித்தார்.
News August 17, 2025
நடிகை மினு முனிர் வழக்கில் திடுக்கிடும் தகவல்

நடிகை மினு முனீர் அண்மையில் போக்சோ சட்டத்தில் கைதானார். இது தொடர்பாக போலீசார் விசாரிக்கும் சூழலில், ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகிவுள்ளது. அதில், பாதிக்கப்பட்ட இளம்பெண் சம்பவம் நடந்த போது சிறுமியாக இருந்ததால் சென்னையில் தங்கிய வீடு, குற்றவாளிகள் அடையாளம், ஓட்டல் குறித்த விவரங்களை மறந்துள்ளதாகவும், இதனால் வழக்கை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியாமல் போலீசார் திணறுவதாகவும் கூறப்படுகிறது.
News August 17, 2025
சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

* அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
* அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
* உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.
* சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.
* கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.