News February 11, 2025

சட்டசபை தேர்தலில் காங்., உடன் கூட்டணி இல்லை: மம்தா

image

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 2026ல் அங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தனித்து போட்டியிட உள்ளதாக கூறியுள்ளார். டெல்லியில் AAPக்கு காங்., உதவவில்லை. அரியானாவில் காங்.,க்கு AAP உதவவில்லை. இதனால் 2 மாநிலங்களிலும் பாஜக வென்று விட்டது என்றார். எனினும், மேற்கு வங்கத்தில் காங்., இல்லாததால் தான் தனித்தே போட்டியிடுவேன் என்றார்.

Similar News

News March 8, 2026

பைனலில் வென்றால் எவ்வளவு பரிசு?

image

T20 WC தொடருக்காக ICC மொத்தம் ₹120 கோடி பரிசுத்தொகையை ஒதுக்கியுள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ₹27.48 கோடியும், 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹14.65 கோடியும் கிடைக்கும். அரையிறுதியில் தோல்வியடைந்த SA, ENG அணிகளுக்கு தலா ₹7.24 கோடியும், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகளுக்கு ₹3.48 கோடியும், போட்டியில் பங்கேற்ற 20 அணிகளுக்கு தலா ₹2.29 கோடியும் கிடைக்கும்.

News March 8, 2026

₹8,000 வரை ஊதிய உயர்வு.. அரசின் இன்ப அதிர்ச்சி

image

ரேஷன் கடை ஊழியர்களுக்கு TN அரசு ஊதிய உயர்வு அளித்ததன் மூலம், புதிய பணியாளர்களுக்கு ₹2,000, சீனியர்களுக்கு ₹8,000 வரை கூடுதல் ஊதியம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக ஊதிய உத்தரவுக்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகி இருப்பதாக அனைத்து ரேஷன் கடை ஊழியர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அகவிலைப்படியை 58% ஆக உயர்த்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News March 8, 2026

கண்களை பாதுகாக்க இதை செய்ய மறக்காதீர்

image

*அதிக நேரம் எதையும் உற்றுப் பார்க்காதீர்கள். கண்களை அடிக்கடி சிமிட்டுவது அவசியம். *குடல் சுத்தமாக இருந்தால் கண் பார்வையும் தெளிவாக இருக்கும். *இரு உள்ளங்கைகளால் இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்க்கவும். லேசாக சூடு பரவும் வரை இவ்வாறு செய்த பிறகு, கண்களுக்கு ஓய்வளியுங்கள். *வெளிச்சம் குறைந்த இடங்களில் இப்படி பயிற்சி செய்வது நல்லது. SHARE IT

error: Content is protected !!