News October 5, 2025
காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை

2027 கோவா தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். காங்கிரசுடன் எந்த சூழ்நிலையிலும் கூட்டணி கிடையாது என கூறிய அவர், கடந்த சில ஆண்டுகளாக MLA-க்களை பாஜகவுக்கு காங்கிரஸ் சப்ளை செய்து வருவதாக விமர்சித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் காங்கிரஸ் MLA-க்கள் பாஜகவுக்கு தாவமாட்டார்கள் என மக்களுக்கு உறுதியளிக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News March 13, 2026
கோமாவில் இருக்கிறாரா ஈரானின் புதிய உயர் தலைவர்?

ஈரானின் புதிய உயர் தலைவராக பொறுப்பேற்றுள்ள <<19365880>>மொஜ்தபா கமேனி<<>>, இன்று முதல்முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். இதனிடையே US, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்து கோமாவிற்கு சென்றுவிட்டதாகவும், ஒரு காலை இழந்துவிட்டதாகவும் UK ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் காணொளி வாயிலாக மக்களுடன் உரையாற்றாதது குறித்து பலரும் சந்தேகத்தை எழுப்புகின்றனர். இதில், உண்மை என்னவென்று தெளிவாக தெரியவில்லை.
News March 13, 2026
SPORTS 360°: கால்பந்தில் இந்தியா அபாரம்

*U-17 மகளிர் கால்பந்தில், இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் மியான்மரை வீழ்த்தியது *உலக பாரா தடகளத்தில் சுமித் அன்டில் 69.25மீ தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார் *உயரம் தாண்டுதல் T44, T42 பிரிவுகளில் பிரவீன் குமார், சைலேஷ் குமார் தங்க பதக்கத்தை வென்றனர் *சுவிஸ் ஓபன் பேட்மிண்டனில் தருண் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் *இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் இரட்டையரில், யூகி பாம்ப்ரி-கோரன்ஸன் இணை அரையிறுதிக்கு தகுதி
News March 13, 2026
கேஸ் தட்டுப்பாடு என திட்டமிட்டு பரப்பப்படுகிறது: மோடி

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருப்பதாக தவறான தகவல்களை சிலர் திட்டமிட்டு பரப்புவதாக PM மோடி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தகவல்களை பரப்புபவர்களின் உண்மை முகம் மக்களின் முன் அம்பலப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார். போரின் தாக்கம் ஒவ்வொரு நாட்டிலும் உள்ளது என்றும், இதை எதிர்த்துப் போராட இந்தியா கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


