News October 23, 2024
கடலூரில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது ‘டானா’ புயலாக வலுவடைந்து பின்னர் தீவிர புயலாக மாறும். பின்னர் புயல் அக்.25ஆம் தேதி அதிகாலை ஒடிசா பூரி-சாகர் தீவு இடையே கரையைக் கடக்கும். இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்த நிலையில் இன்று (அக்-23) 2-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Similar News
News January 15, 2026
கடலூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு! APPLY பண்ணுங்க!

கடலூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!
News January 15, 2026
கடலூர்: கணவன் அடித்தால் CALL பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கணவன் அடிப்பது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது போன்ற குடும்ப வன்முறைகளை கடலூர் மாவட்ட பெண்கள் யாரேனும் எதிர்கொண்டால், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9486793372) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!
News January 15, 2026
கடலூர் அருகே பெரும் சோகம்!

அரியநாச்சியில் நேற்று சாலை <<18859688>>விபத்தில் <<>>இறந்தவரை பார்ப்பதற்காக அவரது குடும்பத்தினர் 4 பேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அரியநாச்சி அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மோதியதில், வசந்தா (55) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒரே நாளில் அரியநாச்சி பகுதியில் அடுத்தடுத்து நடந்த விபத்துக்கள் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


