News May 25, 2024
2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ரெமல் புயலாக வலுப்பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ரெமல் புயலானது வங்கதேசம்-மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள கடல் பகுதியில் கரையை கடக்கும் என்பதால், மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News March 4, 2026
‘கேரளா ஸ்டோரி 2’ TN அரசுக்கு சீமான் எச்சரிக்கை

இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் ‘கேரளா ஸ்டோரி 2’ படத்திற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இப்படத்தை TN-ல் திரையிட திமுக அரசு அனுமதித்தது வெட்கக்கேடானது என்றும், உடனடியாக தடைசெய்ய தவறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் சீமான் எச்சரித்துள்ளார். இதுபோன்ற படங்கள் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி நாட்டின் ஒருமைப்பாட்டை சிதைக்கும் உள்நோக்கமுடையது எனவும் அவர் கூறியுள்ளார்.
News March 4, 2026
தவெகவின் தேர்தல் அறிக்கையில் இலவசங்களா?

விஜய் அமைத்த அருண்ராஜ் தலைமையிலான குழு, தவெகவின் தேர்தல் அறிக்கையை தயாரித்துவிட்டதாக கூறப்படுகிறது. வரும் 8-ம் தேதி முதற்கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதில், இளைஞர்கள், பெண்களை கவரும் வகையில் 10 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளதாம். அதுபோல, முழு அறிக்கையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப், இணைய சேவை உள்ளிட்ட வாக்குறுதிகள் உள்ளதாக TVK வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News March 4, 2026
இன்று பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறையாகும். அதேபோல், திருவப்பூர் முத்து மாரியம்மன் கோயில் விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 9-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்ய மார்ச் 14 வேலைநாளாகும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.


