News October 27, 2024

NO.1: விஜய்யை முந்திய அல்லு அர்ஜுன்

image

‘புஷ்பா 2’ படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு ₹300 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், இந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகராக அவர் உருவெடுத்துள்ளார். முன்னதாக, ₹250 கோடி சம்பளத்துடன் ஷாருக்கான் முதலிடத்தில் இருந்தார். ‘தளபதி 69’ படத்திற்கு ₹275 கோடி சம்பளம் பெற்று, ஷாருக்கானை விஜய் ஓவர் டேக் செய்தார். இந்நிலையில், விஜய்யை அல்லு அர்ஜுன் முந்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News February 17, 2026

தருமபுரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

image

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் பெண்களுக்கான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (பிப்.17) காரிமங்கலம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் இம்முகாமில் 10, 12, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்த 18 வயது பூர்த்தியடைந்த பெண்கள் பங்கேற்றுப் பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடனே SHARE பண்ணுங்க.

News February 17, 2026

‘அச்சம் இல்லை’ என காங்., தலைமையை சீண்டிய MP

image

கூட்டணி விவகாரத்தில் தலைமையின் ஆணையை மீறி கருத்து கூறி வரும் மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்திருப்பதாக <<19157591>>செல்வப்பெருந்தகை<<>> கூறினார். இந்நிலையில், தனது X பக்கத்தில் ‘அச்சம் இல்லை, அச்சம் இல்லை, அச்சமென்ப தில்லையே’ என சிரிப்பு ஸ்மைலியுடன் மாணிக்கம் தாகூர் சற்றுமுன் பதிவிட்டுள்ளார். இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல தலைமையை சீண்டும் செயல் என சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

News February 17, 2026

FLASH: கார்கள் விலை ₹70,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த பிப்ரவரியில் ஜாக்பாட் தள்ளுபடியை கார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. குறைந்தபட்சம் ₹30,000 முதல் அதிகபட்சமாக ₹73,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன மாடல் கார்கள், அதன் விலை என்ன, எவ்வளவு சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பதை மேலே உள்ள போட்டோக்களை வலப்பக்கமாக SWIPE செய்து பாருங்கள். அப்படியே கார் வாங்க நினைத்த உங்களது நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!