News December 23, 2025
No.1 பவுலராக மாறிய இந்தியாவின் தீப்தி சர்மா

மகளிர் உலகக்கோப்பையில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு தீப்தி சர்மா முக்கிய காரணமாக திகழ்ந்தார். மேலும், நேற்று முன்தினம் நடந்த இலங்கைக்கு எதிரான முதல் டி20-ல் போட்டியில் அவரது பவுலிங் அசத்தலாக இருந்தது. இந்நிலையில், இன்று வெளியான டி20 பவுலிங் ரேங்கிங் பட்டியலில் ஆஸ்திரேலியாவின்
அன்னபெல் சதர்லேண்டை பின்னுக்கு தள்ளி தீப்தி முதலிடம் பிடித்துள்ளார்.
Similar News
News December 25, 2025
பட்டுப்புடவையில் தேவதையாக கீர்த்தி ஷெட்டி!

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான கீர்த்தி ஷெட்டிக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. Gen Z-யின் கனவு கன்னியாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி இன்ஸ்டாவில் ரெகுலராக போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது பட்டுப்புடவையில் தேவதையாக மின்னும் அவரது போட்டோக்களை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் மேலே SWIPE பண்ணி பாருங்க…
News December 25, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹160 உயர்வு!

தங்கம் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹20 உயர்ந்து ₹12,820-க்கும், சவரனுக்கு ₹160 உயர்ந்து ₹1,02,560-க்கும் விற்பனையாகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹3,360 என தாறுமாறாக உயர்ந்துள்ளதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News December 25, 2025
EPS-ஐ வீழ்த்துவதுதான் ஒரே குறிக்கோள்: வைத்திலிங்கம்

அதிமுக என்ற பூமாலை, இன்று குரங்கு கையில் மாட்டியுள்ளது என வைத்திலிங்கம் விமர்சித்துள்ளார். அந்த குரங்கு, OPS, தினகரன் என ஏராளமானவர்களை பிய்த்து போட்டுவிட்டதாக கூறிய அவர், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க EPS இல்லாத அதிமுக இருக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார். மேலும், EPS-க்கு அதிமுகவின் கொள்கை, கோட்பாடு என எதுவுமே தெரியாது எனவும் அவரை வீழ்த்துவதுதான் ஒரே குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்துள்ளர்.


